ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஃபேஸ்புக், யூடியூப்புக்கு வருகிறது மிகப்பெரிய சவால்... சீன ஆப் அதிரடி

ஃபேஸ்புக், யூடியூப்புக்கு வருகிறது மிகப்பெரிய சவால்... சீன ஆப் அதிரடி

Youtube

Youtube

டிக் டாக் ஆப்பில் இதுவரையில் ரத்தினச் சுருக்கமாக வீடியோக்களை வெளியிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிக் டாக், யூ டியூப் என எண்ணற்ற சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் செயல்படுகிறது. எழுத்து எண்ணிக்கை வரம்பின்றி எழுத அனுமதிக்கும் ஃபேஸ்புக்கிற்கு இங்கு பயனாளர்கள் அதிகம். அதேசமயம், ரத்தினச் சுருக்கமாக 2 அல்லது 3 வரிகளில் மட்டுமே பதிவு வெளியிட அனுமதிக்கும் டிவிட்டருக்கும் இங்கு தேவை அதிகம்.

அதுபோலத்தான் வீடியோக்களை மையமாக கொண்டு செயல்படும் யூ டியூப் மற்றும் டிக் டாக் ஆகியவை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் நாம் வீடியோக்களை வெளியிட முடியும் என்றாலும், பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்கு உரிய இடமாக யூ டியூப் மற்றும் டிக் டாக் இருக்கின்றன.

இதில், டிக் டாக் ஆப்பில் இதுவரையில் ரத்தினச் சுறுக்கமாக வீடியோக்களை வெளியிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஷார்ட் வீடியோக்கள் மூலமாக எண்ணற்ற கலைஞர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சீனாவில் உள்ள பைட் டான்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் ஆப் முதலில் தொடங்கப்பட்டபோது, பயனாளர்கள் ஒரு நிமிட வீடியோ வெளியிடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்த வீடியோ கால வரம்பை 3 நிமிடங்களாக டிக் டாக் நிறுவனம் அதிகரித்தது.

இனி 10 நிமிட வீடியோ…

சுருக்கமான கால அளவுகளை பயன்படுத்தியும் பல லட்சக்கணக்கான பயனாளர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றாலும் கூட, நீண்ட, நெடிய கண்டெண்ட்களை வெளியிட விரும்பும் பயனாளர்களுக்கு அது போதுமானதாக இல்லை. இத்தகைய சூழலில், பயனாளர்களின் தேவையை புரிந்து கொண்ட டிக் டாக் நிறுவனம், 10 நிமிடங்கள் வரையில் வீடியோ வெளியிடுவதற்கான அனுமதியை தற்போது வழங்கியுள்ளது.

இதுகுறித்து டிக் டாக் நிறுவன்ம் வெளியிட்டுள்ள செய்தியில், “10 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை இனி அப்லோடு செய்யலாம் என்ற அளவுக்கு எங்களது திறனை நாங்கள் மேம்படுத்துவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். உலகெங்கிலும் உள்ள கலைஞர்களின் படைப்பு திறனை இது மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ-டியூப், ஃபேஸ்புக்கிற்கு போட்டி

முன்னதாக, டிக் டாக்கிற்கு போட்டியாக யூ-டியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஷார்ட் வீடியோ வெளியிடும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதிகமான பார்வைகளை பெறும் வீடியோக்களுக்கு பணமும் அவர்களால் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு போட்டியாக 10 நிமிட வீடியோ வெளியிடும் வசதியை டிக் டாக் அறிமுகம் செய்துள்ளது.

Also read... Windows கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல OS-களை  இயக்குவது எப்படி?

இதுகுறித்து, தொழில்நுட்ப நுண்ணறிவு நிபுணர்கள் கூறுகையில், “எவ்வளவு நேர அளவுக்கு வீடியோ வெளியிடலாம் என்பதில் இப்போதும் டிக் டாக்-ஐ விட யூ டியூப் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் கூட, டிக் டாக்கிற்கு இருக்கும் மவுஸை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அது இல்லை. நீண்ட நேர வீடியோக்களை வெளியிட டிக் டாக் அனுமதிப்பதால், இனி அங்கு விளம்பதாரர்களை பெறவும், டிக் டாக் பயனாளர்கள் பணம் ஈட்டவும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Tik Tok