அரசிடம் விளக்கமளிக்க உள்ளோம் - தடை குறித்து டிக்டாக் அறிக்கை

TikTok Ban |இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட தயார் எனவும் இந்தியாவின் டிக்டாக் நிறுவனத் தலைவர் நிக்கில் காந்தி கூறியுள்ளார்.

அரசிடம் விளக்கமளிக்க உள்ளோம் - தடை குறித்து டிக்டாக் அறிக்கை
டிக்டாக்
  • News18
  • Last Updated: June 30, 2020, 12:34 PM IST
  • Share this:
லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலோனார் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிக்-டாக் செயலி தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனம் மத்திய அரசிற்கு விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவில் டிக்-டாக்கை பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும், சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் பகிரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. எங்கள் தரப்பு பதில் மற்றும் விளக்கமளிக்க அரசை சந்திக்க உள்ளோம்.
படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட தயார் எனவும் இந்தியாவின் டிக்டாக் நிறுவனத் தலைவர் நிக்கில் காந்தி கூறியுள்ளார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading