உலகளவில் அதிக டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் ஆப் என்ற பெருமையை பேஸ்புக்கிடமிருந்து தட்டிப்பறித்திருக்கிறது சீனாவின் டிக் டாக் செயலி.
சமூக வலைத்தளமான பேஸ்புக் 2004ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. உலகளவில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் பேஸ்புக் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் அதிக டவுன்லோட் செய்யப்படும் மொபைல் ஆப் என்ற பெருமையும் பேஸ்புக்கிடமே இருந்து வந்தது.
இந்நிலையில் Nikkei Asia நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின்படி 2020ம் ஆண்டு உலகளவில் அதிக டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் செயலிகளில் பேஸ்புக்கை பின்னுக்குத்தள்ளி சீனாவின் டிக்-டாக் செயலி முதலிடத்தை பிடித்து திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 2019ம் ஆண்டு வெளியான அதிக டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக் உலகளவில் 4ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: தலிபான்களை ஒடுக்க இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் அரசு!
சீனாவின் ByteDance நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் டிக் டாக் இந்தியாவிலும், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டிருந்த நிலையிலும் கூட அதிக டவுன்லோட்கள் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிக் டாக் செயலியை உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்துவதாகவும், அமெரிக்காவில் மட்டும் 10 கோடி பேர் இதனை பயன்படுத்துவதாகவும் Nikkei Asia தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு உலகில் அதிகளவில் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளின் வரிசையில் 4வது இடத்தில் இருந்த டிக் டாக், பேஸ்புக், பேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ் அப் போன்ற பாப்புலரான செயலிகளை பின்னுக்குத்தள்ளி கவனம் ஈர்த்திருக்கிறது.
2020ம் ஆண்டு அதிக டவுல்லோட் செய்யப்பட்ட செயலிகளில் டாப் 10 பட்டியலில் டிக் டாக் முதலிடத்திலும், பேஸ்புக் 2ம் இடத்திலும், வாட்ஸ் அப் 3வது இடத்திலும் உள்ளது.
இன்ஸ்டாகிராம் (4), பேஸ்புக் மெசெஞ்சர் (5), ஸ்னாப் சாட் (6), டெலிகிராம் (7), லைக் (8), பிண்ட்ரெஸ்ட் (9), ட்விட்டர் (10) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இப்பட்டியலில் டிக் டாக், லைக், ஸ்னாப் சாட்டை தவிர்த்து பிற செயலிகள் அனைத்துமே அமெரிக்காவைச் சேர்ந்தவை. டிக் டாக், லைக் சீனாவைச் சேர்ந்தவை, டெலிகிராம் ரஷ்யாவைச் சேர்ந்தது.
Also Read: தலிபான்களின் அசுர முன்னேற்றம் – ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!
அதே நேரத்தில் 2020ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் அதிக டவுன்லோட் ஆன செயலிகளில் பேஸ்புக் தொடர்ந்து முதலிடத்திலும் டிக் டாக் தொடர்ந்து 2வது இடத்திலும் நீடிக்கின்றன. 2019ல் 4ம் இடத்தில் இருந்த வாட்ஸ் அப் 2020ல் 3ம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீடியோ பிளாட்ஃபார்மாக இருக்கும் டிக் டாக் இளசுகளிடையே கவர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதால் பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமை வீடியோ பிளாட்ஃபார்மாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2019-ல் அதிக டவுன்லோட் ஆன செயலிகள்
1. பேஸ்புக் மெசெஞ்சர்
2. பேஸ்புக்
3. வாட்ஸ் அப்
4. டிக் டாக்
5. இன்ஸ்டாகிராம்
6. லைக்
7. ஸ்னாப் சாட்
8. டெலிகிராம்
9. ட்விட்டர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook, Mobile Phone Users, Technology, Tik Tok, WhatsApp