டிக்டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்...வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு!

48 மெகா பிக்சல் ரியர் கேமிரா உடன் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன் 4,000mAh ஆக உள்ளது.

டிக்டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்...வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு!
டிக்டாக் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்
  • News18
  • Last Updated: November 2, 2019, 2:47 PM IST
  • Share this:
டிக்டாக் செயலியின் முதலாளியான பைட் டான்ஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

Smartisan Jianguo Pro 3 என்னும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்நாப்ட்ராகன் 855+ SoC திறன் கொண்டு செயல்படுகிறது. மொத்தம் நான்கு ரியர் கேமிராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. லாக் ஸ்கிரீனில் இருந்து நேரடியாக டிக்டாக் ஆப் செல்லும் வகையிலான அம்சம் கவர்வதாய் உள்ளது.

மூன்று ரகங்களில் மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் வெளியாகி உள்ள இந்த போனின் தொடக்க விலை, இந்திய மதிப்பின்படி 29 ஆயிரம் ரூபாய் ஆகும். 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


8ஜிபி + 256 ஜிபி ரகம் 32 ஆயிரம் ரூபாய். இந்த இரு போன்களும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் பச்சை நிறத்தில் 36 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். டூயல் சிம் கொண்ட இந்த போன் 6.39 இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

48 மெகா பிக்சல் ரியர் கேமிரா உடன் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன் 4,000mAh ஆக உள்ளது.

மேலும் பார்க்க: நெட்ஃப்ளிக்ஸ்-க்குப் போட்டியா? இந்தியாவில் வெளியானது ஆப்பிள் டிவி+மிஸ் சூப்பர் குளோப் போட்டியில் முதலிடம் பிடித்த தமிழகப் பெண்
First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்