இந்தியர்களின் தகவல்களை எந்த நாட்டு அரசுக்கும் பகிரவில்லை. எதிர்காலத்திலும் பகிரமாட்டோம் - டிக்டாக் இந்தியா..

டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, ”டிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் தகவல்களை எந்த நாட்டு அரசுக்கும் பகிரவில்லை. எதிர்காலத்திலும் பகிரமாட்டோம் - டிக்டாக் இந்தியா..
டிக்டாக் இந்தியா
  • Share this:
டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, ”டிக்டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது” என்று தெரிவித்துள்ளார்.

எங்கள் செயல்பாடுகள் எப்போதும், பயன்பாட்டாளர்களின் ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு உட்பட சட்டங்களுடன் இணங்கி நடக்கும் தெளிவான உறுதியை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக்கை, பாதுகாப்பு காரணமாக ஜூன் 29 அன்று, 59 சீன ஆப்ஸ்களை தடை செய்தது மத்திய அரசு. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்தது.


மத்திய அரசிடம் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தற்போது டிக்டாக் இந்தியா தெரிவித்துள்ளது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading