டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து டிக்டாக் - மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நிறுத்தம்

டிக்-டாக்

டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் மைக்ரோசாப்ட், டிக்டாக் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டிக்டாக்கை உருவாக்கிய பைட் டான்ஸ்( Byte Dance) நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக்கை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

  இதையடுத்து இருநிறுவனங்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்த பதிலையையும் தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவில் நீண்ட காலம் தாங்கள் செயல்பட உள்ளதாக பைட் டான்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  Published by:Sankar A
  First published: