வீ-சாட்டுக்கு போட்டியாக ஃபிளிப்சாட்; புதிய செயலியை வெளியிட்ட பைட்டான்ஸ்!

ஃபிளிப்சாட் செயலி விருப்பம் சார்ந்த சமுக செயலி. அதனுடன் சேர்த்து வழக்கமான தகவல் பரிமாற்றமும் செய்ய முடியும்.

news18
Updated: May 22, 2019, 10:54 AM IST
வீ-சாட்டுக்கு போட்டியாக ஃபிளிப்சாட்; புதிய செயலியை வெளியிட்ட பைட்டான்ஸ்!
(Getty Images)
news18
Updated: May 22, 2019, 10:54 AM IST
டிக் டாக், மியூசிக்கலி போன்ற பரபரப்புக்குரிய வீடியோ செயலிகளை வெளியிட்ட பைட்டான்ஸ், அடுத்ததாக அனைவரும் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் வகையில் ஃபிளிப்சாட் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

பைட்டான்ஸ் நிறுவனம் ஸ்னாப் சாட் செயலிக்குப் போட்டியாக அண்மையில் டுயோஷன் என்ற செயலியை அறிமுகம் செய்தது. அதன் அடுத்த கட்டமாகச் சீனாவில் அதிகளவில் பயன்படுத்தி வரும் வீ-சாட் செயலிக்குப் போட்டியாக ஃபிளிப்சாட் என்ற செயலி சேவையைத் தொடங்கியுள்ளது.

ஃபிளிப்சாட் செயலி விருப்பம் சார்ந்த சமுக செயலி. அதனுடன் சேர்த்து வழக்கமான தகவல் பரிமாற்றமும் செய்ய முடியும். சில குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் பற்றி விவாதிக்கவும் முடியும் என்று பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போது இந்த ஃபிளிப்சாட் செயலி ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என்ற இரு இயங்குதள வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்காது. ஐஎஸ் ஸ்டோரில் மட்டும் கிடைக்கும். ஆண்டிராய்டு பயனர்கள், பைட்டான்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலிகள் பக்கத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஃபிளிப்சாட் செயலியில் போட்டோ, வீடியோ, குரல் மற்றும் ஜிஃப் என வாட்ஸ்ஆப் செயலிகள் உள்ளது போன்று அனைத்து வகையிலும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

அலிபாபா நிறுவனத்தின் அலிபே வாலெட் சேவையும் ஃபிளிப்சாட் செயலியில் கிடைக்கும்.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...