பிளேஸ்டோரில் டாப் இடத்தில் டிக்டாக் - ஐந்தில் ஒருவர் இந்தியர்

TikTok |

பிளேஸ்டோரில் டாப் இடத்தில் டிக்டாக் - ஐந்தில் ஒருவர் இந்தியர்
டிக்டாக்
  • Share this:
கடந்த மாதம் உலகிலேயே அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ கேம் அல்லாத செயலிகளில் டிக்டாக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அச்செயலியை 11 கோடியே 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகமாகும்.அதிலும் ஐந்து பேரில் ஒருவர் என்ற வகையில் இந்தியர்களே அதிகமாக பதிவிறக்கம் செய்ததாக சென்சார் டவர் என்ற அமைப்பின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலியே அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும், வீடியோ கான்பரன்ஸ் செயலியான ஜூமும் உள்ளன.

Also read... சாம்சங்கின் புதிய Galaxy Tab S6 Lite டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading