முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / TikTok | உலக அளவில் கெத்து காட்டும் டிக்டாக்.!

TikTok | உலக அளவில் கெத்து காட்டும் டிக்டாக்.!

TikTok

TikTok

TIKTOK | 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் டிக்டாக் ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் மாதம், 2020ம் ஆண்டு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் யூசர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலிக்கு, இது பெரும் இழப்பாக அமைந்தாலும், உலக அளவில் இதுவரை டிக்டாக்கின் மவுசு சிறிதும் குறையவில்லை.

சீன நிறுவனத்தை சேர்ந்த டிக்டாக் 2020ம் ஆண்டு முதல் உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் ஆப் ஆக உள்ளதாக சென்சார் டவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, சீனாவில் டூயின்( Douyin) என அழைக்கப்படும் டிக்டாக், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டும் கேம் அல்லாத பயன்பாடாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அதேபோல் கூகுள் ப்ளே ஸ்டோரில், கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டும் முதல் ஆப் ஆக கூகுள் ஒன் உள்ளது. டிக்டாக் இந்த காலாண்டில் மட்டும் ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் உள்ள யூஸர்கள் மூலமாக 821 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ல் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்:

2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் டிக்டாக் ஆகும். ஒட்டுமொத்தமாக, 187 மில்லியனுக்கும் அதிகமான ஆப் இன்ஸ்டால்களுடன் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் ஆக டிக் டாக் உள்ளது என சென்சார் டவர் தரவுகள் தெரிவிக்கின்றன. வீடியோ அடிப்படையிலான சமூக ஊடக தளமான ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிக்டாக் அதிக அளவிலான மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது.

Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!

கூகுள் பிளே ஸ்டோர் தரவரிசையின் படி, டிக்டாக் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் ஆக பேஸ்புக் இருந்தது, மாறாக, இந்த ஆண்டு 125.8 மில்லியன் யூஸர்கள் முதன் முறை யூஸர்களாக இன்ஸ்டாகிராமை டவுன்லோடு செய்துள்ளதால், அது முதலிடம் பிடித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வளர்ச்சி:

சென்சார் டவரின் தரவுகளின் படி, ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் முதல் முறையாக செய்யப்பட்ட டவுன்லோடுகள் 1Q22 இல் 1.1 சதவீதம் உயர்ந்து, 36.8 பில்லியன் டவுன்லோடுகளை எட்டியுள்ளது. உண்மையில், இரண்டு ஆப் ஸ்டோர்களும் ஏறக்குறைய ஒரே வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஆப்பிள் ஸ்டோரில் ஆண்டுக்கு 1.2 சதவீதம் உயர்ந்து 8.5 பில்லியனாக உள்ளது, அதே நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்டுக்கு 1.1 சதவீதம் வளர்ச்சி அடைந்து 28.3 பில்லியனாக உள்ளது.

Also Read : ஆண்டிராய்டு யூஸர்களின் விவரங்களை திருடிய கூகுள்..

வருவாயைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கூகுள் ப்ளே ஸ்டோரை விட இரண்டு மடங்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. இது 5.8 சதவீதம் Y/Y 20.6 பில்லியன் டாலரில் இருந்து 21.8 பில்லியன் டாலராக வளர்ந்து வருகிறது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் நுகர்வோர் செலவினம் மூலமாக தோராயமாக 10.7 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 11.7 பில்லியன் டாலர் ஈட்டப்பட்டதால், டிக்டாக்கின் மதிப்பு 8.5 சதவீதமாக குறைந்துள்ளது.

First published:

Tags: Technology, Tik Tok