ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவுக்கென புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ‘டிக்டாக்’!

இந்தியாவுக்கென புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய ‘டிக்டாக்’!

டிக்டாக்

டிக்டாக்

கடந்த சில நாள்களாக சர்ச்சைகள் பல ஏற்படுத்தும் ஆப் ஆக இருந்து வரும் சீனாவின் தயாரிப்பான ‘டிக்டாக்’ ஆப் இந்தியாவில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியப் பயனாளர்களுக்காகப் புதிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது ‘டிக்டாக்’ ஆப்.

வீடியோ ஷேரிங் ஆப் ஆன ‘டிக்டாக்’ தனது இந்தியப் பயனாளர்களுக்கு புதிய ஆப்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது கமெண்ட் பாக்ஸில் தேவையில்லாத வகைகளில் பதிவாகும் கமெண்ட்டுகளை நீக்க முடியும். ‘ஃபில்டர் கமெண்ட்ஸ்’ என்ற இந்த ஆப்ஷன் மூலம் சுமார் 30 வார்த்தைகள் வரையில் ப்ளாக் செய்து கொள்ள முடியும்.

தொடக்கக்கட்டத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி வார்த்தைகளை மட்டுமே ப்ளாக் செய்துகொள்ளும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் இதர பிராந்திய மொழிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளாக் செய்ய பயனாளர் தேர்ந்தெடுக்கும் 30 வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

டிக்டாக் இந்தியாவும் ’சைபர் பீஸ்’ அறக்கட்டளையும் இணைந்து பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்காக இப்புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.

கடந்த சில நாள்களாக சர்ச்சைகள் பல ஏற்படுத்தும் ஆப் ஆக இருந்து வரும் சீனாவின் தயாரிப்பான ‘டிக்டாக்’ ஆப் இந்தியாவில் இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பார்க்க: நெட்டிசன்களிடம் சிக்கிய அஜித்தின் நேர்கொண்ட பார்வை

First published:

Tags: Tik Tok