தடை விதிக்க முயலும் தமிழக அரசு... என்ன சொல்கிறது ‘டிக்டாக்’ நிறுவனம்..?
ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகைச் செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் கூறப்பட்டது.
news18
Updated: February 14, 2019, 3:08 PM IST
news18
Updated: February 14, 2019, 3:08 PM IST
இரண்டு நாட்களுக்கு முன்பு டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பான சேவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிக் டாக் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.“பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு டிக் டாக் முன்னுரிமை வழங்குகிறது. பயனர்கள் டிக் டாக் செயலியை தவறான வழியில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் குறித்துப் புகார் தெரிவிக்கும் சேவை அறிமுகம் செய்யப்படும்” என்றும் டிக் டாக் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது செவ்வாய்க்கிழமை எம்.எல்.ஏ, தமீமுன் அன்சாரி, “ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகைச் செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், “ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போல், டிக் டாக் செயலியைத் தடை செய்ய மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பு மக்களும் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். புளுவேல் சர்வர் எப்படி ரஷ்யாவில் இருந்ததோ அதைத் தடை செய்ய மத்திய மூலம் நடவடிக்கை எடுத்தது போல டிக்டாக் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.இதனை அடுத்து டிக் டாக் இந்தியா பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: வளர்ச்சி பாதையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு...
இந்நிலையில், பாதுகாப்பான சேவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிக் டாக் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.“பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு டிக் டாக் முன்னுரிமை வழங்குகிறது. பயனர்கள் டிக் டாக் செயலியை தவறான வழியில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
எங்கள் விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் குறித்துப் புகார் தெரிவிக்கும் சேவை அறிமுகம் செய்யப்படும்” என்றும் டிக் டாக் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது செவ்வாய்க்கிழமை எம்.எல்.ஏ, தமீமுன் அன்சாரி, “ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகைச் செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், “ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போல், டிக் டாக் செயலியைத் தடை செய்ய மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
கலாச்சாரம் பாதிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பு மக்களும் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். புளுவேல் சர்வர் எப்படி ரஷ்யாவில் இருந்ததோ அதைத் தடை செய்ய மத்திய மூலம் நடவடிக்கை எடுத்தது போல டிக்டாக் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
Loading...