குழந்தைகள் தனியுரிமை விதிமீறல்; டிக் டாக் மீது ரூ.40 கோடி அபராதம்

டிக் டாக் செயலியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காக அதைத் தமிழ்நாட்டில் தடை செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Web Desk | news18
Updated: February 28, 2019, 8:42 PM IST
குழந்தைகள் தனியுரிமை விதிமீறல்; டிக் டாக் மீது ரூ.40 கோடி அபராதம்
டிக் டாக்
Web Desk | news18
Updated: February 28, 2019, 8:42 PM IST
குழந்தைகளிடம் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக, சேகரித்ததற்காக டிக் டாக் செயலி நிறுவனத்திற்கு அமெரிக்க தலைமை வர்த்தக ஆணையம் 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மக்களிடையே வேகமாக பரவி வரும் டிக் டாக் செயலி, சீனாவைச் சேர்ந்த Bytedance நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் அமெரிக்க குழந்தைகளிடம் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக அந்த செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த புகாரை விசாரித்த அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் bydance நிறுவனத்திற்கு 40 கோடி ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.

டிக் டாக் நிறுவனத்தின் செயலி பெரும்பாலானவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களை விட வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.


இந்நிலையில் குழந்தைகள் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதிகளை டிக் டாக் செயலி மீறியுள்ளது. பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 65 மில்லியன் பயனர்கள் இந்தச் செயலியில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலும் இந்தச் செயலிகள் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. இந்தச் செயலிகளில் பாலியல் சம்பந்தமான உள்ளடக்கங்களைப் பரிந்துரைப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து டிக் டாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “இது போன்ற புகார்களைத் தவிர்க்க இளம் பயனர்களுக்கான தனிப்பட்ட செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அதில் செயலியைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்த கூடிய வசதிகளும் அறிமுகம் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.

Loading...

டிக் டாக் செயலியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காக அதைத் தமிழ்நாட்டில் தடை செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: 
First published: February 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...