1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா...!

சர்வதேச அளவில் கேமிங் ஆப் ஆக இல்லாத செயலிகளில் மூன்றாம் இடத்தில் டிக்டாக் உள்ளது.

1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற டிக்டாக்... வருவாய் அளிக்கும் இந்தியா...!
சர்வதேச அளவில் கேமிங் ஆப் ஆக இல்லாத செயலிகளில் மூன்றாம் இடத்தில் டிக்டாக் உள்ளது.
  • News18
  • Last Updated: November 16, 2019, 3:25 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் 1.5 பில்லியன் டவுன்லோடுகளை டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இந்தியாதான் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலில் 1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, மொத்த டவுன்லோடுகளில் 31 சதவிகிதம் இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சியை டிக்டாக் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா அதிக டவுன்லோடுகளை செய்துள்ளது. சீனாவில் 45.5 மில்லியன் அதாவது 7.4 சதவிகிதத்தினர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர்.37.6 மில்லியன் அதாவது 6 சதவிகித டவுன்லோடுகள் உடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.


சர்வதேச அளவில் கேமிங் ஆப் ஆக இல்லாத செயலிகளில் மூன்றாம் இடத்தில் டிக்டாக் உள்ளது. முதலிடத்தில் 707.4 மில்லியன் ஆப் டவுன்லோடுகள் உடன் வாட்ஸ்அப் செயலியும் 636.2 மில்லியன் டவுன்லோடுகள் உடன் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மேலும் பார்க்க: போதிய வருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு ‘குட் பை’..! யூட்யூப்பர்ஸ் கலக்கம்
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading