Home /News /technology /

ஹேக் செய்யப்பட்ட டிக்டாக்! 200 கோடி யூசர்கள் டேட்டா திருட்டு – அதிர்ச்சி அளித்த அறிக்கை

ஹேக் செய்யப்பட்ட டிக்டாக்! 200 கோடி யூசர்கள் டேட்டா திருட்டு – அதிர்ச்சி அளித்த அறிக்கை

டிக்டாக்

டிக்டாக்

TikTok Hacked | சர்வரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவால் டிக் டாக் ஸ்டோரேஜ் ஆக்சஸ் ஹேக்கர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அதன் மூலம் யூசர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணைய உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய செயலிகளில் டிக் டாக் செயலிக்கு முக்கிய பங்கு உள்ளது. இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நேரத்தில் டிக்டாக் செயலியின் அறிமுகம், பொழுதுபோக்கு உலகில் புதிய வரவாக கோடிக்கணக்கான யூசர்களை கவர்ந்தது. சீனாவைத் தாயகமாக கொண்ட இந்த வீடியோ செயலி இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருப்பினும், பெரும்பாலான நாடுகளில் டிக் டாக் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த திங்களன்று டிக் டாக் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 200 கோடி யூசர்களின் டேட்டா பேஸ் பதிவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வரில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவால் டிக் டாக் ஸ்டோரேஜ் ஆக்சஸ் ஹேக்கர்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அதன் மூலம் யூசர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு சைபர் செக்யூரிட்டி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஹைவ் சபை`சைபர் செக்யூரிட்டி, ‘டிக் டாக்கில் டேட்டா ப்ரீச் எனப்படும் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் டிக்டாக்கில் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்களுடைய டிக் டாக் பாஸ்வேர்டை மாற்றுங்கள் மற்றும் டூ-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் இயக்க வேண்டும்’ என்று கோரியுள்ளது.அதுமட்டுமில்லாமல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்ட டேட்டாவை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். எங்களுடைய சந்ததாரர்களுக்கும் பிரைவேட் கிளைண்ட்டுக்கும் இதைப் பற்றிய எச்சரிக்கை செய்தியை ஏற்கனவே அனுப்பி இருக்கிறோம் என்பதையும் கூறியுள்ளது.

Also Read : அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

இவர்கள் மதிப்பாய்வு செய்த சாம்பிள் டேட்டா உண்மையானதா அல்லது போலியானதா என்பதை பற்றி டேட்டா பிரிட்ஜ் தகவல் தளத்தின் உருவாக்கிய டோரி ஹண்ட் என்பவர் கமெண்ட் செய்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த தகவலை வைத்துக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.ஆண்ட்ராய்டு OS தளத்தில் டிக் டாக் பயன்படுத்தும் யூசர்களுக்கு ஒரு பாதிப்பைக் கண்டறிந்துள்ளனர் மைக்ரோசாப்ட் 365 டிஃபெண்டர் ஆய்வுக் குழுவினர். ஆண்ட்ராய்டு டிக்டாக் யூசர்கள் ஒரு தீங்கிழைக்கும் லின்க்கை கிளிக் செய்தாலே, அவர்களுடைய டிக்டாக் வீடியோக்கள் முதல் தனிப்பட்ட தகவல் வரை அனைத்துமே ஹேக்கர்கள் கைப்பற்ற அனுமதி அளிக்கும்.

Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு

இந்நிலையில், டேட்டா திருட்டு டிக் டாக்கில் அலட்சியத்தால் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அலிபாபா கிளவுட் ஸ்டோரேஜில் அனைவராலும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்தி டிக்டாக் செயலி தனது டேட்டாவை சேமித்து வைத்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த ஒரு சோர்ஸ்கோடு வெளியாகியுள்ளது.

ஆனால் டிக் டாக் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான சோர்ஸ்கோடுக்கும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று டிக் டாக் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Hacked, Technology, TikTok

அடுத்த செய்தி