டிக் டாக் செயலியை கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கக் கூறிய மத்திய அரசு!

மதுரை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

news18
Updated: April 17, 2019, 12:24 AM IST
டிக் டாக் செயலியை கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கக் கூறிய மத்திய அரசு!
டிக் டாக்
news18
Updated: April 17, 2019, 12:24 AM IST
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக்-ஐ நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 3-ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.


இந்நிலையில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் செயலிகள் தளங்களிலிருந்து டிக் டாக் செயலியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிக் டாக் நிறுவனம் “இந்தியாவிற்கான உள்ளடக்கத்தைக் கண்காணித்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான விதிகளை மதிக்காத வீடியோக்களை நீக்கியுள்ளோம். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற உள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

ஃபிப்ரவரி மாதம் முதலே தமிழக அரசு, டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் பார்க்க:
First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...