ட்விட்டர் கணக்குகளுக்கு மூன்று வெவ்வெறு நிறங்களில் டிக் வழங்கப்படும் எனவும், இந்த நடைமுறை வரும் டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலகில் சாமானியர்கள் முதல் விவிஐபிகள் வரையிலும், தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல அரசுத் துறைகளும் பயன்படுத்தும் ஒரு சமூக ஊடகம் ட்விட்டர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகின் முன்னணி பணக்காரர் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர் கணக்குகளுக்கு புளூ டிக் வழங்கப்படும் எனவும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் எலன் மஸ்க்.
மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்.! என்ன செய்ய காத்திருக்கிறார்.?
கட்டண வசூல் அறிவிப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை எலன் மஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஏற்கனவே பிரபலங்கள் தங்கள் கணக்கில் புளூ டிக் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக கட்டணம் என்கிற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எலன் மஸ்க்.
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளை உறுதிப்படுத்தும் விதமாக மூன்று வண்ணங்களில் டிக் வழங்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. அதன்படி நிறுவனங்களுக்கு கோல்ட் நிறத்திலும் அரசாங்க கணக்குகளுக்கு கிரே நிறத்திலும், தனி நபர்களுக்கு நீல நிறத்திலும் டிக்குகள் வழங்கப்படும் என எலன் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் பிரபலமாக இருந்தாலும், சாமானியர்களாக இருந்தாலும் இருவருக்குமே ஒரே புளூடிக் தான் வழங்கப்படும்.
இந்த டிக்குகள் வழங்கப்படுவதற்கு முன்பு அனைத்து கணக்குகளும் சரிபார்க்கப்பட்ட பிறகே சரிபாப்பு உறுதி டிக் வழங்கப்படும் எனவும் எலன் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை 4 லட்சம் டுவிடட்ர் கணக்குகளுக்கு பளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அந்த கணக்குகள் எல்லாமே அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் என முக்கிய நபர்களுடைய கணக்குகளாக உள்ளன. ஆனால் இனிமேல் வரும் நடைமுறைப் படி தனிநபர் கணக்குகள் அனைத்திற்குமே ஒரே சரிபார்ப்பு டிக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!
மேலும் புதிய நடைமுறை தொடர்பான முழுமையான விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனவும் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என மஸ்க் வலியுறுத்தி வந்தார்.
போலி கணக்குகள் தொடர்பான முழுமையான விபரங்களை வழங்காவிட்டால் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பினவாங்கவும் தயங்கமாட்டேன் எனக் கூறி அதிரடி காட்யடி எலன் மஸ்க், தற்போது ட்விட்டரை கையகப்படுத்தியவுடன் போலி கணக்குகளை களையவே இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.