தென்கொரியாவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம்... கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி

தென்கொரியாவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம்... கற்பனை முகத்தை காட்டும் புனை மெய்மை கண்ணாடி
கோப்புப் படம்
  • Share this:
தென்கொரியாவில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளின் உபயோகத்திற்கான புனை மெய்மை என்று சொல்லப்படும் ஆக்மெண்டேட் ரியாலிட்டி கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருட்களை வாங்கச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கண்ணாடியில் பார்த்தே வாங்குவது வழக்கம்.

அந்த நிறம் தங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதனை உபயோகித்துப் பார்த்து வாங்கிய காலம் கொரோனாவால் மலையேறி விட்டது. இதனால் பெண்களுக்கு உதவும் வகையில் புதிய மென்பொருள் தென்கொரியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



Also read... ₹ 7,220 கோடி அந்நியச் செலாவணி மோசடி - நகைக்கடைக்கு நோட்டீஸ்

இதில் தாங்கள் வாங்க விரும்பும் பொருளை டிக் செய்தால் போதும், அடுத்த நொடி அந்த பொருளை உபயோகிக்கும்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் முகம் எப்படி இருக்கும் என்பதை மென்பொருள் கண்ணாடியில் காட்டி விடும். இந்த முறையில் பொருட்களை வாங்க தற்போது பெண்களிடத்தில் வரவேற்பு பெருகி இருக்கிறது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading