Home /News /technology /

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் - ஆயிரக்கணக்கான யூசர்கள் தவிப்பு.!

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் - ஆயிரக்கணக்கான யூசர்கள் தவிப்பு.!

Instagram

Instagram

Instagram Down | ஒரே நிறுவனம்தான் 3 சமூக வலைதளங்களையும் நடத்துகிறது என்றாலும் கூட, அந்த மூன்றின் பயன்பாடுகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறானவை ஆகும்.

இன்றைய உலகில் நாம் அனைவருமே ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஏதோ ஒரு சமூக வலைதளங்களை பயன்பத்தி வருகிறோம். இதில், ட்விட்டர் தவிர்த்து மற்ற 3 சமூக வலைதளங்களுமே மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானவை.

ஒரே நிறுவனம்தான் 3 சமூக வலைதளங்களையும் நடத்துகிறது என்றாலும் கூட, அந்த மூன்றின் பயன்பாடுகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறானவை ஆகும். உதாரணத்திற்கு வாட்ஸ்அப் என்பது இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் போல பயன்படுகிறது. இதில் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, டாகுமெண்ட் மற்றும் லொகேஷன் ஆகியவற்றை அனுப்பிக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக் என்பது கருத்துக்கள், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும், இன்னபிற விவாத தளமாகவும் இருக்கிறது. அதுவே இன்ஸ்டாகிராம் தளத்தை எடுத்துக் கொண்டால் விதவிதமான ஃபோட்டோக்களை அப்லோடு செய்யவும், வீடியோக்களை அப்லோடு செய்யவும் விரும்பும் நபர்களுக்கு அது உதவியாக இருக்கிறது.

பொதுவாக சமூக வலைதளங்கள் ஏதோ சில தொழில்நுட்ப காரணங்களால் அவ்வப்போது முடங்குவதும், அதனால் யூசர்கள திணறுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. அதிலும், இன்ஸ்டாகிராம் வலைதளம் அடிக்கடி முடங்கி வருகிறது.



 

ஐரோப்பிய நேரப்படி கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவிலும், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 3 மணி அளவிலும் இன்ஸ்டாகிராம் வலைதளம் முடங்கியிருக்கிறது. இதனால், சுமார் 24,000 யூசர்கள் தங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ள முடியாமலும், பிறரது பதிவுகளை பார்க்க முடியாமலும் திணறியிருக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் மிக அதிகமான இன்ஸ்டாகிராம் யூசர்கள் தங்கள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

Also Read : இந்தியா, மியான்மார் வன்முறைகளுக்கு காரணமாகிறதா ஃபேஸ்புக் பதிவுகள்- மெட்டா அறிக்கையில் தகவல்

தங்கள் வலைதளம் ஏன் முடங்கியது என்பது குறித்து இன்ஸ்டாகிராம் எந்தவிதமான விளக்கத்தையும் உடனடியாக தெரிவிக்கவில்லை. இதேபோல, அதன் தலைமை நிறுவனமான மெட்டா சார்பிலும் இந்த பிரச்சனை குறித்து பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, ஐரோப்பிய நேரப்படி அதிகாலை 8.15 மணியளவில் டிவிட்டர் வலைதளம் முடங்கியதாகவும், அதன் மூலமாக சுமார் 50 ஆயிரம் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அடுத்த சில மணி நேரங்களில் டிவிட்டர் தளம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.



 

இந்த ஜூலை மாதத்தில் மட்டும் இதற்கு முன்பு இரண்டு முறை இன்ஸ்டாகிராம் வலைதளம் முடங்கியிருக்கிறது. கடந்த 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றும், அதைத் தொடர்ந்து 6ஆம் தேதி புதன்கிழமை அன்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியது.

Also Read : வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... வெளியானது புதிய எச்சரிக்கை.!

அந்த சமயத்தில் யூசர்கள் அனுப்பிய மெசேஜ்கள் உடனுக்குடன் மறைந்துவிட்டன என்றும், சேட்டிங்கிற்கான இன்பாக்ஸிலும் பிரச்சனை நீடித்தது என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக, ஜூன் 23ஆம் தேதி மற்றும் ஏப்ரல், மே மாதங்களிலும் இன்ஸ்டாகிராம் யூசர்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டனர். அடிக்கடி வலைதளம் பிரச்சனைக்குரியதாக மாறுவதால் அதன் யூசர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Instagram, Technology

அடுத்த செய்தி