ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

999 ரூபாய் செலுத்தினால் ₹20 ஆயிரத்துக்கான ஆஃபர்... வோடபோன் வழங்கும் RedX ப்ளான்..!

999 ரூபாய் செலுத்தினால் ₹20 ஆயிரத்துக்கான ஆஃபர்... வோடபோன் வழங்கும் RedX ப்ளான்..!

வோடபோன்

வோடபோன்

வாடிக்கையாளர்கள் My Vodafone app அல்லது வோடபோன் இந்தியா இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வோடபோன் ஐடியா நிறுவனம் புதிதாக RedX என்னும் ப்ளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 999 ரூபாய் செலுத்தினால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜீ 5, வோடபோன் ப்ளே, அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச சர்வதேச ரோமிங், 15% ஹோட்டல் புக்கிங் தள்ளுபடி, ஏர்போர்ட்டில் இலவச அறை வசதி, விமான டிக்கெட் புக்கிங்-ல் 10% தள்ளுபடி, தினமும் 100 எஸ்.எம்.எஸ் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய்க்கான பயன்களை அளிக்கிறது வோடபோன்.

இன்னும் கூடுதலாக அடுத்த ஆறு மாதங்களுக்கு சாம்சங் போன்கள் வாங்கினால் தள்ளுபடி, வழக்கத்தைவிட 50% கூடுதல் இணைய வேகம் என அசத்துகிறது வோடபோன் RedX ப்ளான். போஸ்ட்பெய்ட் ப்ளான் ஆன இந்த RedX ஆஃபர் குறைந்தகால சலுகை மட்டுமே. முதலில் வரும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் My Vodafone app அல்லது வோடபோன் இந்தியா இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறு மாத சந்தாவை ஒரே முறையில் செலுத்த வேண்டும்.

மேலும் பார்க்க: ட்விட்டர் ‘ப்ளூ டிக்’ சாதிய பேதம் காட்டுகிறதா..? ட்ரெண்ட் ஆகும் #cancelallBlueTicksinIndia

Published by:Rahini M
First published:

Tags: Vodafone