ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கார் அளவுக்கு பெரிதான டைனோசர் காலத்திய ஆமை பற்றி தெரியுமா?

கார் அளவுக்கு பெரிதான டைனோசர் காலத்திய ஆமை பற்றி தெரியுமா?

கடல் ஆமை

கடல் ஆமை

இந்த ஆமை இன்றைய மிகப்பெரிய ஆமையை எல்லாம் அசால்ட்டாக தள்ளி வைத்துவிடும் அளவு பெரியது. இன்று அமைகளில் பெரியதான லெதர்பேக் ஆமையே அதிகபட்சம் , 7 அடி நீளம் தான் வளரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த பூமி முழுவதுமே ஆச்சரியங்கள் நிறைந்ததுதான். ஒவ்வொரு நாளும் இது மனிதர்களுக்கு புதுப்புது ஆச்சரியங்களை தந்துகொண்டே இருக்கிறது. டைனோசர்களை எல்லாம் நாம் அனிமேட்டட் திரைப்படங்களில்தான் பார்த்துள்ளோம். அந்த காலத்தில் வாழ்ந்த மற்ற உயிர்கள் பற்றி நமக்கு தெரியாது. இப்போது ஒரு  புதிய உயிரினம் கிடைத்துள்ளது.

டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த பெரிய ஆமைகளின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா தீவுக்கூட்டத்தின் கரையோரங்களின் துணை வெப்பமண்டல கடல்களில் இந்த இனங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

Leviathanochelys aenigmatica என்று அழைக்கப்படும் இந்த இனம் 3.7 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மகத்தான பரிமாணங்களைக் கொண்ட ஒரு விவிலிய கடல் மிருக அடிப்படையாக கொண்டு மற்றும் அதன் பெயர் "புதிரான லேவியத்தான் ஆமை" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆமையின் மிகப்பெரிய அளவைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்,. தோராயமாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு சிறிய காரின் அளவு உள்ளது என்று விவரிக்கிறது.

இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் தேனீக்கள்…ஆபத்தில் மனிதகுலம்…

"உண்மை என்னவென்றால், பைரனீஸில் கடல் பகுதிகளில் பொதுவாக இது போன்ற ஊர்வன எச்சங்கள் ஏதும் இல்லை. இந்த அண்மையில் எச்சம் என்பதே ஒரு ஆச்சர்யம்தான். மேலும் இந்த பரிமாணங்களில் ஆரம்ப காலத்தியது. இதன் புதைபடிவங்களின் உருவவியல் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இது புதிய அறிவியல் பரிணாமத்திற்கு வித்திடும் " என்று மிக்குயில் கிரஸ்டாபான்ட் காடலான் இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோண்டாலஜி இன் ஆராய்ச்சியாளர் ஆஸ்கார் காஸ்டிலோ தெரிவித்தார்.

வடகிழக்கு ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் சுமார் 12 அடி நீளமும், இரண்டு டன்களுக்கும் குறைவான எடையும் கொண்டதாகும். டைனோசர்களின் யுகத்தின் இறுதி அத்தியாயமான கிரெட்டேசியஸ் காலத்தில் ஆமை வாழ்ந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் விவரித்தனர். இந்த ஆமை இன்றைய மிகப்பெரிய ஆமையை எல்லாம் அசால்ட்டாக தள்ளி வைத்துவிடும் அளவு பெரியது. இன்று அமைகளில் பெரியதான லெதர்பேக் ஆமையே அதிகபட்சம் , 7 அடி நீளம் தான் வளரும்.

இதையும் படிங்க :7,80,0000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து சாப்பிட்ட மனிதர்கள் - தொல்லியல் ஆய்வில் வெளியான ஆச்சரியம்!

லெவியதானோசெலிஸ் நீந்திய பழங்கால டெதிஸ் கடலின் அபாயகரமான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, அந்த சூழலில்  தாக்கு பிடிக்க ஒரு காரின் அளவு இருப்பது சரியானதே என்று கருதுகின்றனர். மொசாசார்கள் எனப்படும் சக்திவாய்ந்த தாடைகளைக் கொண்ட இந்த ஆமை மிகப்பெரிய வேட்டையாடும் விலங்காக இருந்திருக்கலாம். சில எச்சங்கள் 50 அடி (15 மீட்டர்) நீளத்திற்கு மேல் கூட காணப்படுகிறது.

அனைத்து நவீன கடல் ஆமைகளையும் உள்ளடக்கிய குழுவான Chelonioidea இன் பழமையான பிரதிநிதிகளில் ஒன்றாக விளங்கும் இந்த ஆமை இடுப்பின் முன்புறப் பகுதியில் வேறு எந்த ஆமையிலும் காணாத ப்ரொட்டூபரன்ஸ் எனும் தனித்துவமான எலும்பு அமைக்குகளைக் கொண்டுள்ளது.

பூமியின் கடந்த காலத்தைச் சேர்ந்த மற்ற பெரிய ஆமைகளில் ப்ரோடோஸ்டெகா மற்றும் ஸ்டுபென்டெமிஸ் ஆகியவை அடங்கும், இவை இரண்டும் சுமார் 13 அடி (4 மீட்டர்) நீளத்தை எட்டும். இவை சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இது அன்றைய காலத்தில் அமெரிக்காவை இரண்டாக பிரித்த ஒரு நதியில் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். ஆனால் அவை இன்று இல்லை .

Published by:Ilakkiya GP
First published: