Home /News /technology /

வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? ஈஸியான ட்ரிக்ஸ்!

வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? ஈஸியான ட்ரிக்ஸ்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

WhatsApp Tricks | டிரிக்ஸ் பயன்படுத்தி, எதிராளிக்கு மீண்டும் மெசேஜ் அனுப்ப முடியும். அப்போது உங்கள் பக்கம் தவறு இருந்தால், அதற்காக மன்னிப்பு கோரி, உங்களை அன்பிளாக் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.

நாம் அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டுமே மெடா நிறுவனத்துக்கு சொந்தமானவை. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இன்ஸ்டண்ட் மெசேஜ் சேவையை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. எத்தனையோ மெசேஜ் ஆப் வசதிகள் இருந்தாலும், எண்ணற்ற மக்களின் விருப்பத்திற்கு உரிய தேர்வாக வாட்ஸ்அப் இருக்கிறது.

வாட்ஸ்அப் யூசர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கருதி ஏராளமான வசதிகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக டூ ஸ்டெப் ஆதண்டிகேஷன், ஹைடிங் ஸ்டேடஸ், ஹைடிங் புரொஃபைல் போட்டோஸ் மற்றும் பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒருவர் பேசும்போது அல்லது யாரேன்றே தெரியாத அந்நிய நபர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்யும்போது, நீங்கள் அதை கட்டுப்படுத்த முடியும். அதாவது, ஒருவரை பிளாக் செய்வதன் மூலமாக, அவர்கள் நமக்கு மெசேஜ் அனுப்புவதை தடுத்துக் கொள்வதற்கான வசதியை வாட்ஸ் அப் வழங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதே சமயம், நம்மை பிளாக் செய்தவர்களுக்கு, சில டிரிக்ஸ் பயன்படுத்தி நாம் மெசேஜ் அனுப்ப முடியும் என்ற விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிராளியின் புரொபைலுக்கு சென்று நீங்கள் உங்களை அன்பிளாக் செய்துவிட முடியாது என்பது உண்மை தான். ஆனால், டிரிக்ஸ் பயன்படுத்தி, எதிராளிக்கு மீண்டும் மெசேஜ் அனுப்ப முடியும். அப்போது உங்கள் பக்கம் தவறு இருந்தால், அதற்காக மன்னிப்பு கோரி, உங்களை அன்பிளாக் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.



பிளாக் செய்தவரை தொடர்பு கொள்ள எளிய வழி :

இதைச் செய்ய உங்களுக்கு ஒரு நண்பரின் உதவி தேவை. அதாவது உங்கள் நண்பர் ஒரு குரூப் தொடங்கி, அதில் உங்களையும், உங்களை பிளாக் செய்தவரையும் இணைக்க வேண்டும். இப்போது, அந்த குரூப்பில் நீங்கள் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும், உங்களை பிளாக் செய்தவருக்கும் விசிபிள் ஆகும். இதை வைத்து, அவர்களிடம் கோரிக்கை வைத்து அல்லது மன்னிப்பு கேட்டு, அன்பிளாக் செய்யுமாறு நீங்கள் கேட்கலாம்.

ஒருவேளை மூன்றாம் நபர் மூலமாக இதைச் செய்ய வேண்டாம் என்று கருதினால், மற்றொரு வழிமுறை ஒன்று இருக்கிறது. அதை இங்கே பார்க்கலாம்.

Also Read : வாட்ஸ் அப்பில் விரைவில் வருகிறது அசத்தல் அனிமேஷன் அப்டேட்.

பிளாக் செய்த பின்னும் மெசேஜ் அனுப்புவது எப்படி?

* வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனு சென்று, ‘டெலீட் அக்கவுண்ட்’ என கொடுத்து, உங்கள் அக்கவுண்ட்-ஐ டெலீட் செய்யவும்.
* இப்போது, உங்கள் ஃபோனில் மீண்டும் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, மீண்டும் அக்கவுண்ட் தொடங்கவும்.
* ஆப் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால், உங்களை பிளாக் செய்த நபருக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும்.
* ஆனால், வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலீட் செய்யும்போது, அனைத்து குரூப்புகளில் இருந்தும் நீங்கள் வெளியேறி விடுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
* மீண்டும் குரூப் அட்மின்களை தொடர்பு கொண்டு இணைய வேண்டியிருக்கும். ஆனால், உங்களை பிளாக் செய்த அன்புக்குரியவரை விடவும் இது முக்கியமில்லை என்றால், அதை அப்படியே விட்டு விடலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி