முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ரெட் கேபிள் தினம்: ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி-யுடன் பரிசுத்தொகுப்பு விற்பனை அறிமுகம்!

ரெட் கேபிள் தினம்: ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி-யுடன் பரிசுத்தொகுப்பு விற்பனை அறிமுகம்!

ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி-யுடன் பரிசுத்தொகுப்பு

ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி-யுடன் பரிசுத்தொகுப்பு

முந்தைய ரெட் கேபிள் தின விற்பனையின் போது உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பிரபலமான கோரிக்கையை மனதில் கொண்டு, ரெட் கேபிள் ப்ரீவில் கமியூனிட்டி இணைந்து உருவாக்கிய ஜாக்கெட்டுகளுக்கு ஒன்ப்ளஸ் ஒரு வரையறுக்கப்பட்ட விற்பனையை வைத்திருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ’ரெட் கேபிள் தினம்' இன்று. ஒன்பிளஸின் பிரத்யேக உறுப்பினர் திட்டத்தின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி-ன் உடனடி அறிமுகத்துடன் ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. ரெட் கேபிள் கிளப் ஏற்கனவே ஒன்பிளஸ் கமியூனிட்டியுடன் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் டிசம்பர் 2019-ல் துவங்கியதிலிருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 17-ம் தேதி ரெட் கேபிள் தினம் கொண்டாடப்படும். அதிலும் இந்த ஆண்டு ஒரு தொகுக்கப்பட்ட மற்றும் சிறப்பு சலுகைகளுடன் ஒரு அற்புதமான நிகழ்வாக இந்த தினம் இருக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதாவது தொழில்நுட்ப நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி பரிசுத்தொகுப்பு விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் ரெட் கேபிள் தினத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து சலுகை விவரங்களும் குறித்தும் பின்வருமாறு காணலாம்.

1. ரெட் கேபிள் கிளப் மெம்பர்ஷிப் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது. எக்ஸ்ப்ளோரர், இன்சைடர் மற்றும் எலைட். ஒவ்வொரு அடுக்கு உறுப்பினரும் ரூ.8499 மதிப்புள்ள தொகுப்பை வெறும் 4000 ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் ஒன்பிளஸ் அர்பன் டிராவலர் பேக் பேக், ஒன்பிளஸ் தொப்பி மற்றும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜிக்கான ரூ.4000 பரிசு வவுச்சரை ஓபன் சேல்-ன் போது நீங்கள் பெறலாம். ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் வரவிருக்கும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீட்டுடன் இந்த பிரத்யேக சலுகைகளைப் பெறுவார்கள். OnePlus.in அல்லது OnePlus Store செயலியை பார்வையிடுவதன் மூலம் உங்கள் உறுப்பினர் கணக்கில் உள்நுழைந்து, மார்ச் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கவிருக்கும் நேரலையில் கலந்து கொண்டு இந்த தொகுப்பை வாங்கிச்செல்லலாம்.

2. ஒன்பிளஸ் அதன் சிறப்பு ரெட் கேபிள் தின விற்பனையின் ஒரு பகுதியாக அதன் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களுக்கு மட்டும் பின்வரும் சிறப்பு சலுகைகளை விரிவுபடுத்துகிறது.

* தி எகனாமிஸ்ட்டின் டிஜிட்டல் சந்தாவுக்கு 50% தள்ளுபடி

* ஒன்பிளஸ் பேண்டில் INR 200 தள்ளுபடி வவுச்சர். மார்ச் 18 முதல் செல்லுபடியாகும்

* ஒன்பிளஸ் பவர் வங்கியில் INR 200 தள்ளுபடி வவுச்சர். மார்ச் 18 முதல் செல்லுபடியாகும்

* ஒன்பிளஸ் டிவி வாங்குவதற்கு 10% தள்ளுபடி. இந்த சிறப்பு சலுகை மார்ச் 18 முதல் செல்லுபடியாகும்.

* ஒன்பிளஸ் பட்ஸ் Z-ல் 5% தள்ளுபடி. மார்ச் 21 முதல் செல்லுபடியாகும்.

இந்த சலுகைகளைப் பெற ரெட் கேபிள் ப்ரிவ் (Red Cable Privé) உறுப்பினர்கள் OnePlus.in அல்லது OnePlus Store செயலியில் மேலே உள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு பிடித்த ஒன்பிளஸ் தயாரிப்பை வாங்கலாம். முந்தைய ரெட் கேபிள் தின விற்பனையின் போது உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பிரபலமான கோரிக்கையை மனதில் கொண்டு, ரெட் கேபிள் ப்ரீவில் கமியூனிட்டி இணைந்து உருவாக்கிய ஜாக்கெட்டுகளுக்கு ஒன்ப்ளஸ் ஒரு வரையறுக்கப்பட்ட விற்பனையை வைத்திருக்கிறது.

3. ரெட் கேபிள் தினம் ஒன்ப்ளஸ் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் 17 ஆம் தேதி அதன் அனுபவக் கடைகள் மற்றும் பிரத்தியேக சேவை மையங்களில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்க உள்ளது. வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் அனுபவக் கடைகளில் 5% தள்ளுபடியில் எந்த ஒன்பிளஸ் துணைப்பொருளையும் வாங்கலாம். ரெட் கேபிள் ப்ரீவில் கிடைக்கும் வவுச்சருடன் ஒன்பிளஸ் 3 முதல் ஒன்பிளஸ் 6T வரம்பு வரையிலான எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் இலவச பேட்டரி மாற்றீட்டைப் பெறலாம். இதுதவிர. கூடுதல் சேவை கட்டணம் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தையும் சரிசெய்யலாம். ஒன்பிளஸ் 7 முதல் ஒன்பிளஸ் 8T வரம்பு சாதனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் யூசர்கள் ரெட் கேபிள் பராமரிப்பு திட்டத்தில் 20% தள்ளுபடியைப் பெறலாம்.

ஒன்பிளஸ் அதன் கமியூனிட்டியுடன் மதிப்புமிக்க உறவுக்கு பெயர் பெற்றது மற்றும் ரெட் கேபிள் தினம் இந்த வலுவான பிணைப்பின் நீட்டிப்பாகும். எனவே மூன்றாவது ரெட் கேபிள் தினத்தை முன்னிட்டு, மார்ச் 17 ஆம் தேதிக்கான சிறப்பு ஒன்பிளஸ் 9 சீரிஸ் 5 ஜி பரிசு தொகுப்பு விற்பனையில் பங்கேற்க தயாராகுங்கள். மேலே உள்ள முழுமையான பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் சலுகையைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்துக்க கொள்ளுங்கள்.

இது பங்குதாரர் பதிவு.

First published: