ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

WATCH - செவ்வாய் கிரகம் டூ பூமி.. மண் மாதிரிகளை பக்காவாக பார்சல் செய்யும் நாசா.. வீடியோ!

WATCH - செவ்வாய் கிரகம் டூ பூமி.. மண் மாதிரிகளை பக்காவாக பார்சல் செய்யும் நாசா.. வீடியோ!

ரோவர்

ரோவர்

சேமித்த மண் மாதிரிகள் மூலம் ஜெஸெரோ க்ரேட்டரின் வரலாறு மற்றும் செவ்வாய் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதைச் சொல்ல உதவும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர்த்து வேறு எந்த கிரகத்தில் மனிதனால் வாழமுடியும் என்ற சோதனை பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. மெர்குரி தொடங்கி நெப்டியூன் தாண்டி உள்ள கிரகங்களையும் நாம் அலசி ஆராய்ந்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக வேறு கோள்களில் இருந்து நில மாதிரிகளை எடுத்து வந்து ஆராய்ந்து வருகிறோம். ஏற்கனவே நிலவு மற்றும் சில சிறுகோள்களில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து அறைந்து வருகிறோம். அதன் வரிசையில் இப்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து அத்தகைய மாதிரிகளை திரும்பப் பூமிக்கு எடுத்து வரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) விஞ்ஞானிகள், செவ்வாயின் மண் மற்றும் பாறையின் முதல் மாதிரிகளை பூமிக்கு கொணரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலவின் அழகே தனி... 6வது நாளில் சந்திரனுக்கு மிக அருகில் பறந்த நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1​​

இரண்டு விண்வெளி ஏஜென்சிகளும் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் ஒரு மாதிரி குழாய் டிப்போவை உருவாக்க முடிவு செய்துள்ளன. இது ஜெஸெரோ க்ரேட்டரில் உள்ள ஒரு பழங்கால நதி டெல்டாவின் அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள "மூன்று ஃபோர்க்ஸ்" பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாதிரிகள் நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் ரோவர் மூலம் பூமிக்கு எடுத்துவர திட்டமிட்டுள்ளது.

பெர்ஸெவேரன்ஸ் ரோவர் ஏற்கனவே மண்ணின் மாதிரிகளை சேமித்து வருகிறது. அதன் மூலம் ஜெஸெரோ க்ரேட்டரின் வரலாறு மற்றும் செவ்வாய் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தது என்பதைச் சொல்ல உதவும், மேலும் பழங்கால வாழ்க்கையின் அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஜெஸெரோ க்ரேட்டரின் புராதன நதி டெல்டாவின் அடிவாரத்திற்கு அருகில் "யோரி பாஸ்" என்ற பகுதியில் உள்ள நுண்ணிய வண்டல் பாறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் டெபாசிட் செய்யப்பட்டவை. செவ்வாய் கிரகத்தின் காலநிலை இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாக இருந்தபோது நுண்ணுயிர் வாழ்க்கை இருந்ததா என்பதை இது விளக்கும்.

' isDesktop="true" id="842734" youtubeid="t9G36CDLzIg" category="technology">

செவ்வாயின் 14 ராக்-கோர் மாதிரிகளுடன், ரோவர் ஒரு வளிமண்டல மாதிரியையும் மூன்று சாட்சிக் குழாய்களில் சேகரித்துள்ளது. இவற்றை பூமிக்கு எப்படி எடுத்து வரும் என்பதற்கான விளக்க வீடியோ ஒன்றை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி சேமிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தையும் ரோவர் ஒரு சிறிய ரக தனி ராக்கெட்டில் ஏற்றும். அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட் வினிவெளியில் உள்ள அதன் செயற்கை கொலை சென்றதும். செயற்கைகோள் அதை பூமிக்கு அருகில் கொண்டு வந்து பூமியை நோக்கி செலுத்தும். பின்னர் அந்த மாதிரிகள் ஏந்தி வரும் களம் வளிமண்டலம் வழியாக நுழையும். அதை இங்குள்ள ஆய்வாளர்கள் பயன்படுத்துவார்கள் என்று விளக்கியுள்ளது.


Published by:Ilakkiya GP
First published:

Tags: MARS, NASA, Spacecraft