இன்றைய உலகில் நம்மில் பலரும் வெவ்வேறு வகையான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகளை கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு டிஜிட்டல் சேவைகளும் மிகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டது தான் என்றாலும், ஸ்கேமர்கள் ஏதோவொரு வகையில் உங்கள் தகவல்களை வைத்து ஊடுருவி, பணத்தையும் திருடி விடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஹேக்கர்கள் அல்லது ஸ்கேமர்கள் எந்தெந்த ரூபங்களில் உங்கள் பணத்தை திருடக் கூடும் என்று 40 பக்க பட்டியல் ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. BE(A)WARE என்ற அந்தப் புத்தகத்தில் உங்கள் தனி விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பணம் திருட பயன்படுத்தும் பிரபலமான வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம்.
மாலிசியஸ் லிங்க்:
தனிநபரின் பணத்தை திருடுவதற்கு மிக எளிமையான வழிமுறை இது. ஏற்கனவே உள்ள நல்ல இணையதளங்களைப் போலவே காட்சியளிக்கும் போலி இணையதளங்களை ஹேக்கர்கள் உருவாக்குவார்கள். குறிப்பாக, பேங்க் வெப்சைட் அல்லது ஆன்லைன் ஸ்டோர்களுடைய வெப்சைட் போல உருவாக்கப்படும். அதை டெக்ஸ் மெசேஜ் அல்லது சமூக வலைதளங்களில் அனுப்பி வைப்பார்கள்.
இந்த லிங்க்களை கிளிக் செய்து நீங்கள் உங்களது அக்கவுண்ட் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடும்போது, அதை வைத்து உங்கள் பணத்தை மோசடியாளர்கள் திருடுவார்கள். யூபிஐ ஆப்-பில் உங்களுக்கு பணம் அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, பணம் செலுத்தக் கோரும் லிங்க்-ஐ அனுப்பி வைப்பார்கள். நீங்கள் தவறுதலாக அதை பயன்படுத்த நேரிடும்போது உங்கள் பணம் திருடப்படும்.
also read : உங்கள் ஃபோனில் Search History-யை டெலீட் செய்வது எப்படி?
அன்-னோன் மொபைல் ஆப்கள் :
மாலிசியஸ் மொபைல் ஆப் மூலமாக உங்கள் முழு டிவைசையும் அவர்கள் எளிதாக ஹேக் செய்வார்கள். உங்கள் வாட்ஸ் அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக கவர்ச்சிகரமான வாசகங்களுடன் இந்த ஆப் உங்களுக்கு பகிரப்படும். இதைப் பார்த்து ஏமாறும் வாடிக்கையாளர்கள், அந்த ஆப்-ஐ தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து விடுவார்கள். அதன் பிறகு மோசடியாளர்கள் உங்கள் டிவைஸ் ஆக்சஸ் செய்வதற்கு எந்தத் தடையும் இருக்காது.
இந்த ஸ்கிரீனிங் ஆப்களை கொண்டு, உங்கள் இன்டர்நெட் பேங்கிங் விவரங்கள் உள்பட மற்ற விவரங்களை நோட்டம் விட்டு, பிறகு அதை பயன்படுத்தி பணத்தை எடுத்து விடுவார்கள் என எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி.
also read : கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுஸிங் அனுபவத்தை பெறுவது எப்படி?
சேர்ச் என்ஜின் மூலமாக :
வங்கி தொடர்பு எண்கள், வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் மற்றும் அலுவலக தொடர்பு எண்கள் என பலவற்றையும் கூகுள் சேர்ச் என்ஜின் மூலமாக நாம் தேடிப் பெற்றுக் கொள்கிறோம். மோசடியாளர்களுக்கும் இந்தத் தகவல் நன்றாகவே தெரிந்திருக்கிறது. கூகுள் தளத்தில் அவர்களது பொய்யான தொடர்பு எண்களை இடம்பெறச் செய்வார்கள். அதை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் உங்களிடமே தகவல்களை கேட்டுப் பெற்று, பணத்தை திருடிவிடுவார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.