• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தொடர்ந்து மொபைல் பயன்படுத்துபவரா? உங்கள் கண்களை பாதுகாக்கும் இந்த ஆப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

தொடர்ந்து மொபைல் பயன்படுத்துபவரா? உங்கள் கண்களை பாதுகாக்கும் இந்த ஆப் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

Highlab  Eyes Keeper tool

Highlab Eyes Keeper tool

தொடர்ந்து ஸ்கிரீனை பார்ப்பது பார்வை சோர்வு, நீரின்றி கண்கள் வறட்சி ஏற்படுவது அல்லது அருகில் இருக்கும் பொருட்கள் தெளிவாகவும், தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகவும் தெரிய வைக்கும் சிக்கலான மயோபியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

  • Share this:
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெரியவர்கள் பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் மூலம் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் கிளாஸை அட்டண்ட் செய்யும் மாணவர்களும் மொபைல் மற்றும் லேப்டாப் மூலம் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். வயதானவர்கள் மற்றும் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் என பிற தரப்பினரும் தொற்று பரவல் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் ஸ்மார்ட் போன் மற்றும் டேப் தான் கதி என்று இருக்கின்றனர்.

இவ்வாறு நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்று மொபைல்/லேப்டாப் ஸ்க்ரீன் முன் அமர்ந்திருப்பதால் பெரியவர்கள் குழந்தைகள் என்ற பேதமின்றி பார்வை சிக்கல்களின் அபாயங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அதனால் ஹைலேப் (Highlab) உங்கள் கண்களை ஸ்க்ரீன்களிலிருந்து பாதுகாக்க ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது. டிஜிட்டல் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு பிரெஞ்சு ஸ்டுடியோ தான் இந்த ஹைலேப் நிறுவனம். இந்நிறுவனம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சூழலை சிறப்பாகக் கட்டுப்படுத்த அனுமதிக்க "Eyes Keeper"என்ற டூல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Also Read:   25 கிலோவில் உலகின் மிகப்பெரிய லாலிபாப் தயாரித்து அசத்திய யூடியூபர் - வைரலாகும் வீடியோ!

இந்த ஐஸ் கீப்பரானது ஒரு யூஸர் தனது ஸ்கிரீனை பார்க்கும் போது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தகுந்த தூரத்தில் வைத்து பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. ஒருவேளை யூஸர் தனக்கும், ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிற்கும் இடையில் நியாயமான குறைந்தபட்ச இடைவெளியை உறுதி செய்யும் வரை இந்த ஆப் ஸ்கிரீனில் இருப்பவற்றை மங்க செய்யும். யூஸர் பொருத்தமான இடைவெளிக்கு வரும் வரை ஸ்கிரீன் மங்கலாகவே தெரியும். அலுவலகம் அல்லது கல்வி என எதற்காகவும் ஸ்கிரீன்களை பார்க்க அதிக நேரம் செலவிடுவது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

தொடர்ந்து ஸ்கிரீனை பார்ப்பது பார்வை சோர்வு, நீரின்றி கண்கள் வறட்சி ஏற்படுவது அல்லது அருகில் இருக்கும் பொருட்கள் தெளிவாகவும், தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகவும் தெரிய வைக்கும் சிக்கலான மயோபியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். சமீப ஆண்டுகளாக நம் வீடுகளில் அதிகரித்து வரும் டிவைஸ்களின் எண்ணிக்கை சுகாதார உலகத்தை நீண்ட காலமாக கவலையடைய செய்துள்ளன. பல யூஸர்கள் பணி நிமித்தம் காரணமாக அல்லது பொழுதுபோக்கு மற்றும் கேம்களுக்காக நாளொன்றுக்கு 10 முதல் 12மணி நேரத்திற்கும் மேல் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன்களின் ஸ்கிரீனில் மூழ்கி கிடப்பது, அவர்களின் ஸ்கிரீன் டைம் அவர்களின் கையை மீறி சென்று விட்டதை காட்டுகிறது.

Also Read:  கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

இதனால் தூக்கத்தில் சிக்கல், பதட்டம், கவனக் கோளாறுகள், நினைவு திறனில் சிக்கல் போன்ற பலவற்றிற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க ஹைலேப் ஸ்டுடியோ தனது "ஐஸ் கீப்பர்" ஆப்பை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு மற்றும் கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சியில் பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஷன் இம்பாக்ட் இன்ஸ்டிடியூட் படி, 30% குழந்தைகளுக்கு பார்வை பிரச்சினைகள் உள்ளன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தை பயன்படுத்தக்கூடிய ஆப்களை தேர்வு செய்யக்கூடிய அதே சமயம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதே தங்களது நோக்கம் என்று ஹைலேப் ஸ்டுடியோ கூறி உள்ளது. தவிர அதிகரித்து வரும் பார்வை சிக்கல்களை தவிர்க்க குடும்பங்களுக்கு உதவுவதும் இந்த Eyes Keeper ஆப்பின் நோக்கம். இந்த ஆப் விரைவில் கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: