‘மிஷன் சக்தி’ என்றால் என்ன? சேட்டிலைட்டுகளை அழிக்க வேண்டிய தேவை என்ன?

பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டதால் செயற்கைக்கோள் நொடியில் சாம்பலாக்கி காற்றில் கரைந்துவிடும்.

Web Desk | news18
Updated: March 27, 2019, 7:55 PM IST
‘மிஷன் சக்தி’ என்றால் என்ன? சேட்டிலைட்டுகளை அழிக்க வேண்டிய தேவை என்ன?
சாட்டிலைட்
Web Desk | news18
Updated: March 27, 2019, 7:55 PM IST
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திடீரென நேரலையில் பேச உள்ளதாகச் செய்தி வெளியான உடன் இந்தியாவே படப்படுத்தது. கடைசியாகப் பணமதிப்பு நீக்கத்தின்போது தான் பிரதமர் மோடி இப்படி நேரலையில் திடீரென பேசினார்.

அதே போன்று இன்று ஒரு அறிவிப்பு வெளியானதால் தேர்தல் சமயத்தில் மோடி நேரலையில் உரையாற்ற என்ன காரணமாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது.

ஆனால், விண்வெளியில் இந்தியா புதிய சாதனையைப் படைத்துள்ளது என்று கூறினார். உலகின் 4 வது நாடாக இந்தியா இந்தச் சாதனையை நாம் செய்துள்ளது பெருமைக்குரியாதாகப் பார்க்கப்படுகிறது. மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்றார்.


மிஷன் சக்தி என்றால் என்ன?


2019 மார்ச் 27-ம் தேதியான இன்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவுவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கிய திட்டத்தின் பெயரே மிஷன் சக்தி. இந்தியாவின் மிகக் குறுகிய சுற்று வட்டப் பாதையில் பயன்படுத்தாமல் உள்ள ஒரு செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன.

இது ஒரு ஆன்டி சாட்டிலைட் தாக்குதல் சோதனை முயற்சி. முன்னதாக இது போன்று தேவை இல்லாமல் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பு கருதி அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன.

Loading...

எந்தச் செயற்கைக்கோள் தாக்கப்பட்டது?


இந்தியாவில் நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்த ஒரு செயற்கைக்கோள் தாக்கி அழிக்கப்பட்டது என்றும், பிற நாட்டுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்க எந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது?


DRDO எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் வெடித்து பூமியில் விழாதா?


பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டதால் செயற்கைக்கோள் நொடியில் சாம்பலாக்கி காற்றில் கரைந்துவிடும்.

எதற்குப் பழைய செயற்கைக் கோள்களைத் தகர்க்க வேண்டும்?


பழைய செயற்க்கைகோள்கள் அதிகமாக இருக்கும் போது எதிர் நாட்டவர்கள் அதை யாருக்கும் தெரியாமல் திருடி ஒரு நாடு குறித்த தகவல்களைத் திருடவும் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் போர் என்று இருந்தால் பொருளாதாரம், செயற்கைக்கோள், விண்வெளி சார்ந்ததாகத் தான் இருக்கும். அப்படியொரு சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு நோக்கத்தில் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

இந்த சோதனையை இப்போது நடத்த என்ன காரணம்?


2014-ம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. கண்டிப்பாக இந்த சோதனை வெற்றிபெறும் என்று உறுதிப்படுத்திய பிறகு, அரசின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் படி தற்போது செயல்படுத்தப்பட்டது.

இந்த ஏவுகணை நம்மை எதிலிருந்து எல்லாம் பாதுகாக்கும்?


எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால், எதிரிகளின் செயற்கைக்கோளைத் தாக்க என்பது மட்டுமில்லாமல், எதிரிகள் தாக்கிய செயற்கைக்கோள்கள் நம் மீது விழாமல் தற்காத்துக்கொள்ளவும் இந்த பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை நமக்கு உதவும்.

போக்ரான் அணுக்குண்டு சோதனை நடத்தியபோது இந்தியா மீது பொருளாதார தடைவிதிக்கப்பட்டது. அது போன்று இப்போது ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா?


சர்வதேச விண்வெளி சட்டத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தச் சோதனையும் அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டுத் தான் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பு கிடையாது. பொருளாதாரத் தடை ஏதும் விதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: 
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...