ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நீங்கள் போனை சார்ஜ் செய்யும் போது இதை மட்டும் மறக்க வேண்டாம்

நீங்கள் போனை சார்ஜ் செய்யும் போது இதை மட்டும் மறக்க வேண்டாம்

சார்ஜர்

சார்ஜர்

தரமற்ற சார்ஜ்ரை பயன்படுத்த வேண்டாம். அந்த தரமற்ற சார்ஜ்ர்களில் பாதுகாப்பான உள்ளம்சங்கள் இருக்காது. அதனால் மொபைல் போன் பாதிக்கபடும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மொபைல் போன் லேப்டாப் மாதிரி இல்லாமல் யூனிவேர்சல் மைக்ரோ USB பயன் படுத்துகிறது. நீங்கள் உங்கள் மொபைல் ஒரிஜினல் சார்ஜ்ர்யை பயன்படுத்தவில்லை என்றால் உங்களுடைய மொபைல் பேட்டரி பாதிக்கப்படும். அப்படி நீங்கள் மாற்றி ஒரு சார்ஜ்ர் உபயோகித்தால் அந்த சார்ஜ்ரில் இருந்து வெளியாக உள்ள வோல்ட்டேஜ் மற்றும் கரண்ட் ரேட் ஒரிஜினல் சார்ஜ்ர் ரேட் உடன் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் பயன் படுத்தும் சார்ஜ்ர் உங்கள் போன் தயாரிப்பாளர் ஒப்புதல் பெற்றதாக இருக்க வேண்டும்.

  அனைத்து பேட்டரிகளுக்கும் ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. நம் எப்படி நம் போனை பயன் படுத்திகிறோம் என்பதற்கு ஏற்ப தான் நம் மொபைல் போன் பேட்டரி நீண்ட நாள் வரும். நாம் எப்படி சார்ஜ் செய்கிறோம் என்பது முக்கியம். உதரணத்துக்கு நீண்ட நேரம் நம் இரவு முழுவதும் சார்ஜ் போடா கூடாது.அப்படி மொபைலை விட்டுவிட்டால் அது பேட்டரியை பாதிக்கும்.அதை போல தரமற்ற சார்ஜ்ர் பயன்படுத்த வேண்டாம். எப்பொழுதும் நீங்கள் ரிச்சார்ஜ் செய்யும் பொது குறைந்தபட்சம் 80 சதவீதமாவது ரிச்சார்ஜ் ஆகும் படி பார்த்து கொள்ளுங்கள்.

  எலானை மிஞ்சிய மார்க் -மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்கள் நீக்கம்-அதிரடி அறிவிப்பு

  தரமற்ற சார்ஜ்ரை பயன்படுத்த வேண்டாம். அந்த தரமற்ற சார்ஜ்ர்களில் பாதுகாப்பான உள்ளம்சங்கள் இருக்காது. அதனால் மொபைல் போன் பாதிக்கபடும்.உங்கள் போனில் போட்டுள்ள கேஸ் யை கழற்றி விட்டு அதன் பின்னர்  சார்ஜ் செய்யுங்கள். மொபைல் கேஸ் உடன் சார்ஜ் செய்தால் அதில் இருந்து அதிக வெப்பம் வெளியாகும்.

  வேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜரை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டாம். அது போன் பேட்டரிக்கு நல்லது இல்லை. வேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜ்ர்யை பயன்படுத்தினால் போனில் அதிக வோல்ட்டேஜ் வரும். எதனால் அதிக வெப்பம் போன் பாட்டெரியில் ஏற்படும்.

  மூன்றாவது பார்ட்டி பேட்டரி செயலிகளை உபயோகம் செய்யாதீர்கள்.3 றது பார்ட்டி செயலிகளை பயன்படுத்துவது மூலம் பேட்டரி உடைய ஆயுட்காலம் குறைகிறது. உங்கள் மொபைல் போன் 20 % வரை உபயோகித்த பின்னர் சார்ஜ் மீண்டும் பயன்படுத்துங்கள்.

  ட்விட்டர் பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம்: வழக்கு பாய்கிறது

  பவர்பேங்குடன் இணைக்கப்பட்டிருக்கும் போது உங்கள் கைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த பயன்முறையில் சாதனத்தைப் பயன்படுத்துவது உள் வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றும் பேட்டரி ஆயுளைக் குறைக்கும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Mobile phone, Smartphone