• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Twitter: ‘அவர்கள் இந்திய சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ - ட்விட்டர் நிறுவனத்தை சாடிய ரவிசங்கர் பிரசாத்!

Twitter: ‘அவர்கள் இந்திய சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’ - ட்விட்டர் நிறுவனத்தை சாடிய ரவிசங்கர் பிரசாத்!

ட்விட்டர்,

ட்விட்டர்,

நாங்கள் விமர்சனத்தை மதிக்கிறோம், இது நமது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் எவரும் எங்களை விமர்சிக்க முடியும். ஆனால் எங்கள் சட்டங்கள் முக்கியம், இந்தியா அதன் டிஜிட்டல் இறையாண்மையை சமரசம் செய்யாது”

  • Share this:
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் கண்டறியப்படும் போது அந்த பதிவினை முதன் முதலில் பதிவிட்ட நபர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும், இந்திய அளவில் குறை தீர்ப்பு அதிகாரி ஒருவரை நியமனம் செய்து அவர் குறித்த தகவலை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் இந்தியாவின் இந்த புதிய ஐடி விதிமுறைகளை ஏற்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அந்நிறுவனங்கள் குற்றம்சாட்டிய நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸப் நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை ட்விட்டர் நிறுவனம் கடைபிடித்து வருகிறது.

கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்கத் தவறி பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டதாக சித்தரிக்கும் வகையிலும், பிரதமரை அவமதிக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சி டூல் கிட் ஒன்றை உருவாக்கியிருப்பதாக ட்விட்டரில் சில ஆதாரங்களுடன் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பிட்ரா பதிவு வெளியிட்டார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சம்பித் பிட்ராவின் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் ‘போலியான தகவல்’ என ட்விட்டர் நிறுவனம் முத்திரை குத்தியது. இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக ட்விட்டர் செயல்படுவதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் டெல்லியில் உள்ள அந்நிறுவன அலுவலகங்களில் டெல்லி காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது கவலையளிப்பதாக டிவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சுற்றி வளைத்துப் பதில் சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிவிட்டர் நிறுவனம் வெறும் சமூக ஊடக தளம் மட்டும்தான் எனவும், இந்தியாவின் சட்ட கொள்கைகள் குறித்து பேச அந்நிறுவனத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read More:  பிரதமர் மோடியை 30 நிமிடம் காக்க வைத்தாரா மம்தா பானர்ஜி?

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அவர்கள் இந்திய சட்டத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்தியாவிலிருந்து பெரும் அளவில் லாபமடைந்து வருகின்றனர். இந்திய குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் அந்த தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகின்றனர். நாங்கள் விமர்சனத்தை மதிக்கிறோம், இது நமது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் எவரும் எங்களை விமர்சிக்க முடியும். ஆனால் எங்கள் சட்டங்கள் முக்கியம், இந்தியா அதன் டிஜிட்டல் இறையாண்மையை சமரசம் செய்யாது” என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: