சீன நிறுவனமான Xiaomi தனது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக YouTube Premium சப்ஸ்கிரிப்ஷனை வழங்கும் ஒரு புதிய ப்ரமோஷனல் ஆஃபரை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய சில டிவைஸ்களை வாங்கும் தகுதியான யூஸர்களுக்கு YouTube Premium-ன் எக்ஸ்டென்டட் ஃப்ரீ ட்ரெயல்ஸ்களை Xiaomi India இப்போது வழங்குகிறது.
யூடியூப் பிரீமியம், சந்தையில் உள்ள மற்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளை விட சிறந்த தேர்வாகும், இது ஒரு பயனருக்கு கிடைக்கும் நன்மைகள் மட்டுமே. பயனர்கள் யூடியூப் மியூசிக் பயன்பாட்டை இலவசமாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், யூடியூப் பயன்பாட்டில் விளம்பரமில்லா வீடியோக்களைப் பார்க்கவும் முடியும்.
இந்நிலையில் தகுதியுடைய வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமின்றி மூன்று மாதங்கள் வரை YouTube Premium-க்கான அக்சஸை பெறுவார்கள் என்று Xiaomi நிறுவனம் Twitter-ல் உறுதிப்படுத்தியுள்ளது. xiaomi மற்றும் Google சமீபத்தில் இந்தியாவில் தங்களது புதிய பார்ட்னர்ஷிப் குறித்து அறிவித்தன. 2 நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தனது சில புதிய Xiaomi ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்களை வாங்கிய மற்றும் வாங்குபவர்களுக்கு சிறப்பு மூன்று மாத YouTube Premium ஃப்ரீ ட்ரெயலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.?
யூடியூப் பிரீமியம் பெனிஃபிட்களில் யூடியூப் மியூசிக் பிரீமியத்திற்கான சந்தாவும் அடங்கும், இதில் யூஸர்கள் 80 மில்லியனுக்கும் அதிகமான அதிகாரப்பூர்வ பாடல்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள், கவர்ஸ் மற்றும் ரீமிக்ஸ்களுக்கு அன்லிமிட்டட் மற்றும் ஆட்-ஃப்ரீ அக்சஸை பெறலாம். இந்த சலுகை சில Redmi மற்றும் Mi ஸ்மார்ட் ஃபோன்களில் செல்லுபடியாகும். இதற்கு யூஸர்கள் ஆஃபருக்கு தகுதியான ஃபோனை வாங்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் இந்த YouTube Premium ஆஃபரை ரிடீம் (redeem) செய்யலாம். இது ஜனவரி 31 2023 வரை செல்லுபடியாகும்.
YouTube Premium ஆஃபருக்கு தகுதியான ஃபோன்களின் பட்டியல்...
3 மாதங்கள் YouTube Premium ஃப்ரீ ட்ரெயல் கிடைக்கும் டிவைஸ்கள்:
சியோமி 12 ப்ரோ, சியோமி 11ஐ, சியோமி11i ஹைபர்சார்ஜ், சியோமி11டி ப்ரரோ
2 மாதங்கள் YouTube Premium ஃப்ரீ ட்ரெயல் கிடைக்கும் டிவைஸ்கள்:
சியோமி பேட் 5, ரெட்மி நோட் 11 ப்ரோ+, ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11டி, ரெட்மி நோட் 11 எஸ்
Xiaomi-யின் YouTube Premium சப்ஸ்கிரிப்ஷன் ஆஃபரை எவ்வாறு பெறுவது.?
Xiaomi ஸ்மார்ட் ஃபோனில் முன்பே ப்ரீலோட் யூடியூப் ஆப்-ற்கு சென்று யூஸர்கள் அதை ரிடீம் செய்யலாம். பின் ஆஃபரை பெற யூஸர்கள் ஸ்கிரீனில் உள்ள வழிமுறைகளை பின்பற்றலாம் அல்லது குறிப்பிட்ட டிவைஸில் youtube.com/premium-ஐ விசிட் செய்யலாம். பிப்ரவரி 1, 2022-க்குப் பிறகு ஆக்டிவேட்டேட் டிவைஸ்களில் இந்த ஆஃபர் கிடைக்கும் என்று Xiaomi நிறுவனம் கூறுகிறது. ஜூன் 6, 2022 முதல் மேற்கண்ட தகுதியான Xiaomi மற்றும் Redmi டிவைஸ்களில் இந்த YouTube பிரீமியம் சலுகையை தகுதியான வாடிக்கையாளர்கள் ரிடீம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smart Phone, Youtube