Home /News /technology /

டிசம்பர் 2021க்குள் அறிமுகமாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விவரம்!

டிசம்பர் 2021க்குள் அறிமுகமாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விவரம்!

ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், ஒன்பிளஸ், சியோமி, ரெட்மீ, மற்றும், ரியல்மீ, மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்.

மேலும் படிக்கவும் ...
    ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நாள்தோறும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள், ஒன்பிளஸ், சியோமி, ரெட்மீ, மற்றும், ரியல்மீ, மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காண்போம்,

    Redmi Note 11T 5G :



    Redmi Note 11T 5G அதிகாரப்பூர்வமாக நவம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் Redmi Note 11T விற்பனை டிசம்பர் மாதத்தில் தொடங்கும். இந்த போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11 5G-ன் சிறப்பம்சங்களை ஒத்து இருக்கிறது. MediaTek dimensity 810 MT6833 ப்ராசெஸ்சார் மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு USB Type-C போர்ட்டை கொண்டுள்ளது. மேலும் 4 ஜிபி , 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. பின்பக்கம் 50 எம்பி மற்றும் 8 எம்பி கொண்ட இரண்டு கேமராக்கள், 16 எம்பி செல்பி கேமரா உள்ளது.

    Xiaomi 12 :



     

    Xiaomiயின் அடுத்த தலைமுறை Xiaomi 12 மாடல் ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 12ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC (அல்லது Snapdragon 898 SoC) ப்ராசெஸ்சார் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 100W வேகமான சார்ஜிங் அம்சங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 சாப்ட்வேர் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    OnePlus 9RT:



     

    சமீபத்தில் சீனாவில் அறிமுகமான OnePlus 9RT ஆனது வரும் டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டுடன் வர இருக்கிறது. மேலும் இதில் 65W வேகமான சார்ஜிங், 120Hz டிஸ்ப்ளே மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை கேமரா, 16 எம்பி செல்பி கேமரா போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். மேலும் 4,500mAh பேட்டரி, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 256 ஜிபி என்ற மூன்று வேரியண்ட் ஸ்டோரேஜ் அம்சங்களுடன் வருகிறது.

    Moto G200:



    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஸ்மார்ட்போனான Moto G200 அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Moto G200 Snapdragon 888 Plus ப்ராசெஸ்சார் மூலம் இயங்கும். Moto G200 ஆனது 108 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா அமைப்புடன் வருகிறது மற்றும் 5,000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

    Moto G51 5G:

    Moto G51 5G

     

    லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா இந்தியாவில் தனது மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனை டிசம்பரில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டிலேயே முதல் ஸ்னாப்டிராகன் 480+ ப்ராசெஸ்சார் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-ஸ்மார்ட்போன் வரிசையில் ரூ.20,000க்கு கீழ் உள்ள முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும். ஸ்னாப்டிராகன் சிப்செட்டை தவிர, பெரிய 6.8-இன்ச் முழு-எச்டி+ மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா, 13 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

    மைக்ரோமேக்ஸ் நோட் 1 ப்ரோவில்:

    மைக்ரோமேக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. மைக்ரோமேக்ஸ் நோட் 1 ப்ரோவில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 ப்ராசெஸ்சார் உள்ளது. இதில் 4 ஜிபி ரேம், 48 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி செல்பி கேமரா உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 சாப்ட்வேரில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Smartphone

    அடுத்த செய்தி