• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • புதிய போன் வாங்கப் போகிறீர்களா? உங்களுக்கான டாப் 5 கேமரா ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியல்!

புதிய போன் வாங்கப் போகிறீர்களா? உங்களுக்கான டாப் 5 கேமரா ஸ்மார்ட்ஃபோன்கள் பட்டியல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொண்டாட்டமான காலகட்டத்தில், புதிய பொருட்கள் வாங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்க முடிவு செய்திருந்தால், அதை வாங்குவதற்கான உகந்த நேரம் இது தான்.

  • Share this:
இந்த பண்டிகைக்கால கொண்டாட்டங்களை படம்பிடிக்க உங்களுக்கு தேவை, சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள். அழகான, நேர்த்தியான, சிறந்த புகைப்படங்களை எடுத்து, வரும் பண்டிகைகால நிகழ்வுகளை அழகான புகைப்படங்களாக்க உங்களுக்கான சிறந்த கேமரா ஸ்மார்ட்ஃபோன்கள் இங்கே.,

நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தற்போது நவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், என்று பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இன்னும் சில வாரங்களில் புத்தாண்டும் பிறக்கப்போகிறது. கொண்டாட்டமான காலகட்டத்தில், புதிய பொருட்கள் வாங்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. புதிய ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்க முடிவு செய்திருந்தால், அதை வாங்குவதற்கான உகந்த நேரம் இது தான். வரும் பண்டிகைக் கால கொண்டாட்டங்களை படம்பிடிக்க உங்களுக்கு சிறந்த கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் தேவை. இதையொட்டி, சிறந்த கேமரா மற்றும் பெர்ஃபார்மன்ஸ் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்து இங்கு காண்போம்.,

சாம்சங் கேலக்சி S21 சீரிஸ் (Samsung Galaxy S21 series) :

தற்போது ஸாம்சங் பிராண்டின் மிகச்சிறந்த சீரிசாக கருதப்படுவது கேலக்ஸி S21. மேலும், சமீபத்திய வெளியீடுகளில் சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள் மிகச்சிறந்த கேமராக்களுடன் வருகின்றன. சாம்சங் கேலக்சி S21 மற்றும் S21+ இரண்டுமே, சிறப்பான கேமரா அமைப்புகளான 12MP+12MP+64MP உடன் வருகிறது. மேலும், கேமரா பெர்ஃபார்மான்ஸ் மற்றும் முதன்மையான யூசர் அனுபவம் ஆகிய இரண்டையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் S21 அல்ட்ராவைத் தேர்வு செய்யலாம்.

iPhone 13 ப்ரோ மேக்ஸ் / iPhone 13 ப்ரோ (iPhone 13 Pro Max/ iPhone 13 Pro)

iPhone, மற்றும் iPhone 13 சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாமல் எந்த சிறந்த கேமரா கொண்ட மொபைல்ஃபோன்கள் பட்டியலையும் காண முடியாது. இந்த மாடல்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் சிறந்த கேமராக்களுக்கு பெயர் பெற்றவை. ட்ரிப்பில் 12MP கேமரா அமைப்புடன், iPhone 13 மிக சிறப்பான, மேம்பட்ட கேமரா அனுபவத்தை வழங்குகிறது. துல்லியமான, நேர்த்தியான புகைப்படங்கள் எடுக்க, சென்சார்-ஷிஃப்ட், மேக்ரோ மோடு மற்றும் புதிய சினிமாட்டிக் மோடு ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

சியோமி Mi 11 அல்ட்ரா (Xiaomi Mi 11 Ultra) :

இந்த சியோமி Mi 11 அல்ட்ரா அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட ஸ்மார்ட்ஃபோன். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், இதன் கேமரா பெர்ஃபார்மன்ஸ் மிகவும் பாராட்டுக்குரியது. 50MP + 48MP + 48MP என்ற டிரிப்பில் கேமரா அமைப்புடன் கட்டமைக்கப்பட்ட Mi 11 அல்ட்ரா, பல்வேறு மென்பொருள் அம்சங்களையும் கொண்டுள்ளது. எந்தவிதமான சமரசங்களும் செய்யாமல், சிறந்த கேமரா அனுபவம் பெற, நீங்கள் இந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கலாம்.

Also read... முற்றிலும் Block செய்யாமல் ஃபாலோயர்ஸை நீக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர்!

ஒன்ப்ளஸ் 9 ப்ரோ (OnePlus 9 Pro)

ஹாசில்பிளாடுடனான பார்ட்னர்ஷிப்பில், ஒன்ப்ளஸ் நிறுவனம், தன்னுடைய பிராண்டில் மிகச்சிறந்த கேமராவை ஒன்ப்ளஸ் 9 ப்ரோ மாடலில் வழங்குகிறது. இந்த போனில் 48MP மெயின் கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16MP செல்பி கேமராவும் உள்ளது. மேலும் இதில் ஹாசில்பிளேடு அம்சம் இருப்பதால் நீங்கள் மிகச்சிறந்த புகைப்படங்களை இந்த போனில் எடுக்கலாம்.

விவோ X70 ப்ரோ+ (Vivo X70 Pro+) :

விவோவின் X-சீரிஸ், பிராண்டின் முதன்மையான சீரிசாக கருதப்படுகிறது. சிறந்த கேமரா பெர்ஃபார்மன்ஸ் கொண்ட X-சீரிசிசில், தற்போது புதிதாக X70 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில், உங்களுக்கு நான்கு ரியர் கேமராக்களிலும் OIS (ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) பொருத்தப்பட்டுள்ளது. 50MP + 48MP + 12MP+8MP என்ற நான்கு கேமரா பின்புற கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 32MP செல்பி கேமராவும் உள்ளதால் உங்களால் சிறந்த செல்பி புகைப்படங்களையும் எடுக்க முடியும். பல்வேறு மென்பொருள் கட்டமைக்கப்பட்ட அம்சங்களுடன் வரும் கேமராக்கள், மிகச்சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுவதோடு மட்டுமில்லாமல், துல்லியமான வீடியோக்களையும் எடுக்க அனுமதிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: