சர்வதேச வரவேற்பைப் பெற்றும் இந்தியாவுக்கு வராத அமேசான் டெக் சாதனங்கள்!

ரிமைண்டர், அலெக்ஸா கன்ட்ரோல் எனப் பலவித சிறப்பம்சங்கள் கொண்ட இச்சாதனமும் இந்தியாவில் வெளியாவதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

சர்வதேச வரவேற்பைப் பெற்றும் இந்தியாவுக்கு வராத அமேசான் டெக் சாதனங்கள்!
அமேசான் ஸ்மார்ட் சாதனங்கள்
  • News18
  • Last Updated: September 26, 2019, 1:58 PM IST
  • Share this:
தொழில்நுட்ப சாதனங்களைப் பொறுத்தவரையில் வெறும் அமேசான் எக்கோ மட்டும்தானே பிரபலம் என நாம் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு. இந்தியாவில் வெளியாகாமல் பல அமேசான் டெக் சாதனங்கள் உலகைக் கலக்கிக்கொண்டு இருக்கின்றன.

புதிதாக இந்தியாவுக்கென அப்டேட் செய்யப்பட்ட எக்கோ டாட், எக்கோ ஸ்பீக்கர் ஆகியன வெளியாக உள்ளன. ஆனால், இதுபோக சர்வதேச அளவில் அமேசான் சன் க்ளாஸ், வயர்லெஸ் ‘echobud', Echo Show 8, Echo Frames, Echo Glow, Echo Loop, Smart Oven ஆகியன வெளியாக உள்ளன. இந்தியாவில் வெளியாகாத இச்சாதனங்களின் சிறப்பம்சங்கள் கவர்வதாய் உள்ளன.

ஆப்பிள் AirPods-க்குப் போட்டியாக அமேசான் சார்பில் களம் இறக்கப்பட்ட சாதனம்தான் echobuds. இதனது விலை 129 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரையில் தாங்கும் echobuds-ல் அலெக்சா வெர்ச்சுவல் அசிஸ்டென்ட், டச் கன்ட்ரோல் சென்சார், வெளிப்புறச் சத்தத்தை நீக்கும் தொழில்நுட்பம் நிறைந்தது.


கூகுளின் நெஸ்ட் ஹப்-க்குப் போட்டியாக வந்த Echo Show 8 பெயருக்கு ஏற்றாற்போல் 8 இன்ச் ஸ்கீரின் கொண்ட சாதனம். உங்களது இல்லத்தை ஸ்மார்ட் ஆனதாக மாற்ற உதவும் இச்சாதனத்தின் விலை 129.99 அமெரிக்க டாலர்கள் ஆகும். இதுவும் தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை. Echo Frames என்பது வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் உங்களது சன் க்ளாஸை இயக்கும் தொழில்நுட்பம் கொண்டது. பாஸ் ஃப்ரேம்-க்குப் போட்டியாக அமைந்தாலும் இதுவும் இந்தியாவுக்கு வராத சர்வதேச வரவேற்பைப் பெற்ற சாதனமாகும்.

பல வண்ண நிற விளக்குகளால் வீட்டை ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் அலங்கரிக்க உதவுவது Echo Glow. ஸ்மார்ட் மோதிரமான Echo Loop என்பது ஒரு விரலடக்க ரிமோட் போன்றதுதான். ரிமைண்டர், அலெக்ஸா கன்ட்ரோல் எனப் பலவித சிறப்பம்சங்கள் கொண்ட இச்சாதனமும் இந்தியாவில் வெளியாவதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வந்தது ஜியோமி ரெட்மி 8A... பட்ஜெட் விலையில் அறிமுகமானதால் நல்ல வரவேற்பு!டாப் ஹீரோக்களின் வெற்றி ரகசியம்
First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்