ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டெக் துறையில் பெண்கள் எண்ணிக்கை குறைவு, இதற்கெல்லாம் சாக்கு சொல்லக் கூடாது – ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக்

டெக் துறையில் பெண்கள் எண்ணிக்கை குறைவு, இதற்கெல்லாம் சாக்கு சொல்லக் கூடாது – ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக்

ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக்

ஆப்பிள் தலைமை அதிகாரி டிம் குக்

TIM COOK | தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை பெண்கள் இல்லாமல் சாதிக்க முடியாது என்பதையும் டிம் குக் தெரிவித்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் எந்தெந்த துறையில் பணியாற்றுகிறார்கள், எந்தத் துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது பற்றி அவ்வப்போது கணக்கெடுப்புகள் வெளியாகும். கோவிட் தொற்றுக்கு பின்பு பல பெண்கள் நிரந்தரமாக வேலையை விட்டு விடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றிய கணக்கெடுப்பு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் வேலை, தொழில் மற்றும் வணிகத்தில் அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல பலவிதமான தடைகள் இருந்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். தொழில்நுட்பத் துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் சமீபத்தில் பேசியுள்ளார். இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்டாட்டிஸ்டா வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 33.7 சதவிகிதம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 34.8 சதவிகிதம் ஆகும்.

Read More : ஹேக்கிங் இருந்து கிரேட் எஸ்கேப்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்!

ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது டெக்னாலஜி, மென்பொருள், உள்ளிட்ட தொழில்நுட்ப துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான். இது பலரும் ஏற்கனவே அறிந்துள்ள நிலையில் சமீபத்தில் பி பி சி க்கு பேட்டியளித்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் இதைப் பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்கள் ஏன் டெக் துறையில் குறைவாக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவித சாக்குப் போக்குகளையும் சொல்ல முடியாது. பெண்கள் இந்தத் துறையிலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களுமே பெரிய உயரத்தையும் வளர்ச்சியையும் எட்ட வேண்டுமானால் பெண்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை பெண்கள் இல்லாமல் சாதிக்க முடியாது என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தொழில்நுட்ப துறையை பற்றி பேசிய டிம் குக், தனது ஆப்பிள் நிறுவனத்திலேயே இந்த வேறுபாடு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.உலகம் முழுவதிலும் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் 27 சதவிகிதம் பெண்கள் தான் பணியாற்றுகிறார்கள். 2020 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் டெக் துறையில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 2.1% குறைந்துள்ளது.

டெக் துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று பேசினால் மட்டும் போதாது, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமே! உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற பிராண்டான ஆப்பிள் என்ன செய்தாலுமே தலைப்பு செய்தியாக மாறும். இந்த நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

புரோகிராமர்கள் மற்றும் ஆப் டெவலப்பர்கள் ஆகிய பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இதற்காக அவர் புதிய மேம்பாட்டு திட்டத்தையும் உருவாக்கி இருக்கிறார்.டிம் குக், தொழில்நுட்பத்துறை மேம்பட பெண்கள் எவ்வளவு முக்கியம் “பெண்கள் இருந்தால்தான் தொழில் நுட்பத்திற்கு உயிர் அளிக்க முடியும் மற்றும் அது மனிதர்களிடம் எவ்வாறு பயன்படும் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும். தொழில்நுட்பத்தால் பெரிய அளவில் நமக்கு எட்டாத பல விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால் அதற்கு ஒரேமாதிரியான கண்ணோட்டம் கொண்டவர்களை மட்டும் வேலை வைத்துக்கொண்டு வேலை செய்தால் பலன் அளிக்காது.

பல்நோக்கு பார்வை கொண்ட, பல்வேறு கண்ணோட்டத்தில், சிந்தனைகள் இருப்பவர்களைப் பணியில் எடுக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு சிறப்பான தீர்ப்புகளும் யோசனைகளும் கிடைக்காது” என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.டெக் துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மற்றொரு காரணமாக பெண்கள் தேர்வு செய்யும் பாடத் திட்டத்தை குற்றம்சாட்டியிருக்கிறார். பல பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் ஆகியவற்றை படிப்பதை தேர்வு செய்வதில்லை. கணினி மற்றும் அறிவியல் ஆகியவற்றை படிக்காத பெண்களை அந்தத் துறையில் எப்படி வேலைக்கு அமர்த்த முடியும்? இந்த படிப்பு படித்த பெண்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் பொழுது அதற்கான அந்த துறையில் பணியாற்றும் பெண்களும் இயல்பாகவே குறைவாகத்தான் இருப்பார்கள்! எனவே, அடிப்படையிலேயே பெண்கள் கணினி பற்றியும் புரோகிராமிங் பற்றியும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Apple, Technology, Trending