இனி வாட்ஸ்அப்-ல் மெசேஜ் டைப் பண்ணத் தேவையில்லை!

புதிய இரண்டாம் ’மைக் ஐகான்’ தான் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.

Web Desk | news18
Updated: January 16, 2019, 8:41 PM IST
இனி வாட்ஸ்அப்-ல் மெசேஜ் டைப் பண்ணத் தேவையில்லை!
வாட்ஸ்அப்
Web Desk | news18
Updated: January 16, 2019, 8:41 PM IST
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை. இனி நாம் சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ் அனுப்ப டைப் செய்வோம் அல்லது வாய்ஸ் மெசேஞ் அனுப்புவது வழக்கம். வாய்ஸ் மெசேஞ்களை அனுப்பத் தனியாக ‘மைக்’ போன்றதொரு ஐகான் இருக்கும். அதைத் தான் நாம் பயன்படுத்தி வந்தோம்.

தற்போது வாட்ஸ்அப்-ல் வந்துள்ள புதிய அப்டேட் மூலம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் நாம் வாயால் சொன்னால் போதும், வாட்ஸ்அப்-ன் புதிய மற்றொரு ‘மைக்’ ஐகான் நமக்காக அந்த மெசேஞ்சை டைப் செய்துவிடும். இப்புதிய மைக் ஐகான் தான் சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.

கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி போலவே தான் இந்த வாட்ஸ்அப் புதிய மைக் செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு மீடியம்களிலும் இப்புதிய அப்டேட் உள்ளது.

நாம் chat செய்யவேண்டிய பக்கத்தில் கீ-போர்டு வந்தவுடன் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கீபோர்டு அருகில் கறுப்பு நிற மைக் ஐகான் இருக்கும். இதுவே iOS பயனாளர்களுக்கு கீபோர்டின் வலது பக்கம் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் மெசேஞ்-ஐ பதிவு செய்து வேண்டுமானல் எடிட் செய்து ‘sent' பட்டனை அழுத்த வேண்டும்.

மேலும் பார்க்க: சாலையில் உள்ள பள்ளங்களை மூட களமிறங்கிய சிறுவர்கள்! வைரலாகும் வீடியோ
First published: January 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...