ஐபோன் 12, மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டோரில் அட்டகாசமான தள்ளுபடி!

ஐபோன் 12, மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டோரில் அட்டகாசமான தள்ளுபடி!

இந்த ஸ்டோரில் அட்டகாசமான தள்ளுபடி

இப்போது டெல்லி என்.சி.ஆர் அல்லது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவதையே வாழ்நாள் கனவாக வைத்திருப்போர் ஏராளம். இன்னும் ஒருபடி மேலே போய் கிட்னியை விற்று ஆப்பிள் ஐபோன்களை வாங்கிய சம்பவங்களும் நிறைய நடந்திருக்கிறது.

இதனிடையே மிகப்பெரிய ஆப்பிள் பிளாக்ஷிப் பிரீமியம் ரீசெல்லர் ஸ்டோர்(Apple Flagship Premium Reseller Store )இப்போது டெல்லி என்.சி.ஆர் அல்லது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச் மற்றும் பலவற்றுக்கு நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்த கடையில் மிகசிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. யுஎன்ஐ(UNI) பிராண்டின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்கும் யுனிகார்ன் ஸ்டோர், புதுடெல்லியில் உள்ள தாகூர் கார்டனில் அமைந்திருக்கும் பசிபிக் மாலில் தனது பிளாக்ஷிப் கடையை(flagship store) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள யுனிகார்ன் நிறுவனம், பசிபிக் மாலில் திறக்கப்பட்டுள்ள கடையானது உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ஃபிஸிக்கல் ஸ்டார்களின் வழக்கப்படி வெள்ளை நிறத்தை தீமாக வைத்து நவீன தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது UNI ஆப்பிள் ஃபிளாக்ஷிப் பிரீமியம் ரீசெல்லர் ஸ்டோரில், ஆப்பிள் ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபாட், ஆப்பிள் மேக்புக், ஆப்பிள் ஐமேக், ஹோம் பேட் மினி, ஆப்பிள் ஏர்பாட்கள் மற்றும் பல ஆப்பிள் தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன.

திறப்பு விழா சலுகையின் ஒரு பகுதியாக எங்கள் கடையில் ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் ஐபோன் 12, ஆப்பிள் ஐபாட் (8th gen), மேக்புக் ஏர் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகிய தயாரிப்புகளுக்கு சில சுவாரஸ்யமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உள்ளன. எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு இன்னும் அதிகமான கேஷ்பேக் சலுகைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. UNI ஆப்பிள் ஃபிளாக்ஷிப் பிரீமியம் ரீசெல்லர் ஸ்டோரில் ஆப்பிள் ஐபோன் 12 (64 ஜிபி வேரியண்ட்) மாடலுக்கு சுமார் ரூ.29,900 வரை தள்ளுபடியை வழங்குகிறது. தள்ளுபடி இல்லாமல் இதன் விலை ரூ.79,900. எனவே இந்த மாடலை ரூ.50,000 கொடுத்து சலுகை விலையில் வாங்கி கொள்ள முடியும்.

Also read... Google அறிமுகப்படுத்தியுள்ள Freeze dried tabs: ஆண்ட்ராய்டு போன்களில் இன்னும் வேகமாகும் பிரவுசரின் செயல்திறன்!

ஆப்பிள் ஐபோன் 11-ல் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வாங்க ரூ. 54,900 செலவாகும். ஆனால் எச்.டி.எஃப்.சி கேஷ்பேக் ரூ .6,000, யுனிகார்ன் வழங்கும் இன்ஸ்டன்ட் தள்ளுபடி ரூ.5,490, பழைய போன் எக்ஸ்சேஞ் செய்தால் அதிகபட்சம் ரூ.10,410 மற்றும் எக்ஸ்சேஞ் போனஸாக ரூ.4,000 என மொத்தம் ரூ.25,900 வரி தள்ளுபடி பெற்று ரூ.29,000 செலுத்தி ஐபோன் 11-ஐ வாங்க முடியும். மெல்லிய மற்றும் லேசான லேப்டாப் வாங்க விரும்பினால் ஆப்பிள் எம் 1 ப்ராசஸருடன் வந்துள்ள சமீபத்திய தலைமுறை ஆப்பிள் மேக்புக் ஏர் சிறந்த தேர்வாக இருக்கும். 8-கோர் சிபியு மற்றும் 7-கோர் கிராபிக்ஸ் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி கொண்ட மேக்புக் ஏரின் என்ட்ரி ஸ்பெக் வேரியண்ட் விலை ரூ .92,900. ஏற்கண்டவாறு அனைத்து தள்ளுபடியும் சேர்த்து ரூ .22,000 வரும். இந்த சலுகைகளை பயன்படுத்தி புதிய மேக்புக் ஏர் ரூ .70,900-க்கு வாங்கலாம்.

அதே போல ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 வேரியண்ட்டின் விலை ரூ .43,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது அனைத்து தள்ளுபடிகள், எச்.டி.எஃப்.சி கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் என ரூ 31,900-க்கு கிடைக்கும். வார இறுதி சலுகை என்பதால் இந்த சிறப்பு தள்ளுபடிகள் நாளை மார்ச் 21 அன்று முடிவடையும் என்றும் யுனிகார்ன் குறிப்பிட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: