ஆப்பிள் கேஜெட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டின் பயன்பாடு பற்றி தெரியும். ஆண்ட்ராய்டு போன்களில் எப்படி மெயில் ஐடி வைத்து உள்நுழைந்து பழைய போனில் உள்ள தரவுகளை புதிய சாதனத்திற்கு கொண்டு வருகிறோமோ அதே போல ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் தங்களுக்கான ஆப்பிள் ஐடி மூலம் எத்தனை சாதனங்களை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம்.
ஒரே ஐடியில் திறக்கப்பட்ட ஆப்பிள் சாதனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு, தடையற்ற 'ஹேண்ட் ஆஃப்' அம்சத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், சாதனங்களுக்கு இடையே புகைப்படங்கள், iMessages, ஃபேஸ்டைம் அழைப்புகள் போன்றவற்றை மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, ஆப்பிள் ஐடி அடிப்படையிலான செயல்பாட்டின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதன் பாதுகாப்பு அம்சங்கள். ஆப்பிளின் 'ஆக்டிவேஷன் லாக்' அம்சம் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அற்புதமான அம்சங்களில் ஒன்றாகும். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் திருடப்பட்டால், அதில் உள்ள ஆப்பிள் ஐடி மூலம் அந்த சாதனம் எங்கே இருக்கிறது என்று தேட முடியும்.
அதே வேளையில் அதில் உள்ள தரவுகளை மீட்டமைத்து தரவுகள் வெளியில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அதே நேரம் ஆப்பிள் ஐடி மூலம் அதை மீட்டமைத்து விட்டால் அது புதிய போன் போல மாறிவிடும். அதை சந்தையில் எளிதாக விற்றுவிடலாம். ஐபோன், iPad அல்லது MacBook திருடப்பட்டால், அதை மீட்டமைத்து விற்க திருடர்களுக்கு உங்கள் Apple ID மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்படும்.
ஆப்பிள் ஐடி தரவுகள் அதில் இருக்கும் வரை அதை விற்க முடியாது. அதன் ஸ்க்ரீன், கேமரா, பேட்டரி போன்ற பாகங்களை மட்டும் தனியாக எடுத்து விற்க முடியும். இது முழு போனை சந்தையில் விற்பதை விட விலை குறைவாக தான் கிடைக்கும். இப்போதெல்லாம் திருடுவதில் உள்ள தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. அப்படி போலி லிங்க் ஒன்றை பயன்படுத்தி பயனாளர்களை ஏமாற்றி, திருடர்கள் ஆப்பிள் சாதனத்தை மீட்டமைத்து வருகின்றனர்.
ஐபோன் அல்லது வேறு ஏதேனும் ஆப்பிள் சாதனம் திருடப்பட்டவுடன், திருடர்கள் உடனடியாக சாதனத்தை ஆஃப் செய்துவிட்டு சிம் கார்டை தூக்கிபோட்டுவிடுகிறார்கள். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் தங்கள் ஐபோனைக் கண்காணிக்க 'Find My' செயலியைபயன்படுத்தி தேடிக்கொண்டு இருப்பார்கள். போனை தொலைத்தவர் புது சிம்மையும் பெற்றுவிடுவார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, திருடர்கள் ஒரு போலி வலைத்தளத்தின் இணைப்புடன் மீட்பு தொலைபேசி ஒன்றை அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இந்த ஃபிஷிங் லிங்க் ஆப்பிள் இணையதளம் போன்று தோற்றமளிக்கும். இந்த இணையதளத்தில், உங்கள் திருடப்பட்ட ஐபோனின் இருப்பிடத்தைக் கண்டறிய உங்கள் ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுமாறு கேட்கிறது. பாதிக்கப்பட்டவர் தங்கள் ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேரை உள்ளிடும் தருணத்தில், மோசடி செய்பவர்கள் அதை பயன்படுத்தி ஐபோனில் ஆப்பிளின் ஆக்டிவேஷன் லாக்கை எடுத்துவிட்டு ஐபோனை ஒரு 'புதிய' சாதனமாக மாற்றி விற்று விடுகின்றனர்.
இதையும் படிங்க: காதலர்களுக்கு உதவும் ChatGPT... ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்..!
உங்கள் ஐபோன் திருடப்பட்டால் என்ன செய்வது?
1. 'Find My' ஆப் மூலம் உங்கள் சாதனத்தை 'Lost' எனக் குறிக்கவும்
2. 'Find My' ஆப் மூலம் உங்கள் சாதனத்தில் உள்ள தரவுகளை அழிக்கவும்
3. உங்கள் உள்ளூர் காவல் நிலையம் அல்லது ஆன்லைனில் FIR பதிவு செய்யவும்
4 . எஃப்ஐஆர் நகல் மற்றும் போன் வாங்கியதற்கான ஆதாரத்தை மொபைல் ஆபரேட்டர்களுக்கு அனுப்பவும். இதனால் அவர்கள் IMEI எண்ணை தங்கள் நெட்வொர்க்குகளில் பயன்படுத்துவதைத் தடுத்துவிடுவார்கள். இப்படி நடந்தால் அந்த ஆப்பிள் சாதனத்தை இந்தியாவில் எங்கும் விற்பனை செய்ய முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple IOS, Apple ipad, Apple iphone