சர்வதேச டெக்னலாஜி உலகில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய டிவைஸ்களின் அறிமுகங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் உலகளவில் டெக்னலாஜி ஜாம்பவான்களிடம் இருந்து வெளியான சி சிறந்த செய்திகளை பார்க்கலாம். ஆப்பிள் நிறுவன புதிய தயாரிப்புகளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த டெக்னலாஜி பிரியர்களுக்கான மிக உற்சாகமான வாரமாக கடந்த வாரம் அமைந்தது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 13 சீரிஸை அறிமுகப்படுத்திய ஒரு முக்கியமான வாரமாக கடந்த வாரம் இருந்தது.
இந்நிறுவனத்தின் செவ்வாய் சென்டிமென்டின் படி கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஐபோன் 13 சீரிஸ் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் புதிய அறிவிப்பின்படி, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட புதிய ஸ்மார்ட் போன்கள் புதிய ஏ 15 பயோனிக் சிப்செட்& புதிய கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் ஆகியவற்றுடன் வரும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆப்பிளின் இந்த புதிய ஐபோன் 13 சீரிஸ் இந்தியாவில் ரூ.69,900 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.1,79,900 என்ற விலை அளவு வரை செல்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய
ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டது. புதிய ஐபோன் 13 சீரிஸை தவிர கடந்த வார கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் ஈவன்ட்டில் 2 டேப்லெட்கள் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச், 2 புதிய ஐபேட்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி இந்தியாவில் புதிய ஐபேட்டின் வைஃபை ஒன்லி வேரியன்ட் மாடல் ரூ.30,900-க்கும், வைஃபை + செல்லுலார் மாடல் ரூ.42,900-க்கும் கிடைக்கும். அதே போல இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, 399 டாலர் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.29,400 ஆகும்.
இது தவிர ஆப்பிள் M1 மேக்புக் டிஸ்ப்ளே தொடர்பான பிரச்சனைகளில் அமெரிக்காவில் ஒரு கிளாஸ் ஆக்ஷன் வழக்கை எதிர்கொள்ள நேரிட்டது. ஐபோன் தயாரிப்பாளர் குறைபாட்டை மறைத்ததாக அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆப்பிள் "கடுமையான சோதனை" -களுக்கு பிறகே அதன் தயாரிப்புகள் நிறுவனத்தை விட்டு வெளியே செல்வதை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று இந்த வழக்கில் ஆப்பிளின் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
Also read... ஜிமெயிலில் குவியும் ப்ரமோஷ்னல், ஜங்க் மற்றும் சோஷியல் இ-மெயில்களை ஒரே நேரத்தில் எப்படி டெலிட் செய்வது!
ஆப்பிளை தொடர்ந்து உலக ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சியோமி நிறுவனம், ஐரோப்பாவில் அதன் Mi சீரிஸில் புதிய ஸ்மார்ட் போன்களை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. சியோமி 11டி (xiaomi 11T) மற்றும் சியோமி 11டி ப்ரோ (xiaomi 11T Pro) , சியோமி 11 லைட் 5 ஜி என்இ ( Xiaomi 11 Lite 5G NE) ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களை குளோபல் ஈவன்ட் மூலம் சியோமி அறிமுகப்படுத்தி உள்ளது. Xiaomi 11 Lite 5G NE ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் இந்த மாதம் 29 அன்று லாஞ்ச் செய்யப்படும் என்று இந்த சீன நிறுவனம் அறிவித்து உள்ளது. ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அதன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான ColorOS 12ஐ வெளியிட்டது.
இது சீனாவில் உள்ள Oppo மற்றும் OnePlus சாதனங்கள் இரண்டிற்கும் புதிய பதிப்பு, புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும். தவிர ஆண்ட்ராய்டின் ஆல்டர்நேட்டிவ் வெர்ஷன்களில் இயங்கும் டிவைஸ்களை உருவாக்கி விற்பனை செய்வதற்கான உற்பத்தியாளர்களின் திறனையும், ஊக்கத்தையும் கூகுள் குறைத்துள்ளதாக இந்தியாவின் investigations unit ஒன்று கூறி இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.