நிலவை நெருங்கியது சந்திரயான் 2... திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும்

திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

news18
Updated: September 4, 2019, 7:06 AM IST
நிலவை நெருங்கியது சந்திரயான் 2... திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும்
சந்திரயான் 2
news18
Updated: September 4, 2019, 7:06 AM IST
நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரமின் சுற்று வட்டப்பாதை 2-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலவிற்கும் லேண்டருக்குமான தூரம் 35 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம், ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியிலுருந்து விலகி, நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.


கடந்த 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2-வின் சுற்றுவட்டப்பாதையை இஸ்ரோ தொடர்ந்து மாற்றியமைத்து வந்தது. பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் நேற்று மதியம் 1.15 மணியளவில் தனியாக பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது.

இதனால் நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரம் 119 கிலோ மீட்டர் ஆனது. இந்நிலையில் நேற்று காலை 8.50-க்கு இந்த தூரம் 104 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. 4 நொடிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆர்பிட்டரும் லேண்டரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோ கூறியிருந்தது.

இதையடுத்து 2-வது முறையாக லேண்டர் விக்ரமின் சுற்று வட்டப்பாதை இன்று காலை 3.52 மணியளவில் குறைக்கப்பட்டது. நிலவிற்கும் லேண்டருக்குமான தூரம் 104 கிலோ மீட்டரில் இருந்து 35 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. 9 நொடிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆர்பிட்டரும் லேண்டரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

Loading...




இதையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

Also watch

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...