மொபைல் ஆப்ஸ் வழியாக கிரெடிட் கார்டு பில் செலுத்துகிறீர்களா? அவசியம் படியுங்க...

மொபைல் ஆப்ஸ் வழியாக கிரெடிட் கார்டு பில் தொகை செலுத்துவது மிக சுலபமாக இருந்தாலும் சில சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.

மொபைல் ஆப்ஸ் வழியாக கிரெடிட் கார்டு பில் செலுத்துகிறீர்களா? அவசியம் படியுங்க...
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 30, 2020, 11:24 AM IST
  • Share this:
ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றை கொண்டு பயனர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு மொபைல் ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றின் மூலம் கிரெடிட் கார்டு பில்களை நாம் செலுத்த முடியும். ஆனால், உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க இந்த ஆப்ஸ்களை நம்ப வேண்டுமா? கட்டண பரிவர்த்தனையை முடிக்க உங்கள் வங்கி சேமிப்பு வங்கி கணக்கை ஆப்ஸ்களுடன்  இணைப்பது பாதுகாப்பானதா? மொபைல் ஆப்ஸ்கள் வழியாக கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும் முறை குறித்து புரிந்து கொள்வோம்.,

சலுகைகள் என்ன?

CRED என்பது ஒரு மொபைல் ஆப் ஆகும். இதன் மூலம் நீங்கள்  கிரெடிட் கார்டு பில்களை செலுத்த உங்களது அனைத்து கிரெடிட் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் நீங்கள்  நெட் பேங்கிங் மூலம் கிரெடிட் கார்டு பில்களை செலுத்தலாம், UPI மூலமும், பிற செயலிகள் மூலமும் பணம் செலுத்தும் அம்சம் உள்ளது. 750 க்கும் அதிகமான கடன் மதிப்பெண்களை (கிரெடிட் ஸ்கோர்) கொண்ட நுகர்வோர் CREDல் சேரவும், பணம் செலுத்தவும் முடியும்.


CRED-ன் குறைந்தபட்ச கிரெடிட் ஸ்கோர் அளவை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால் நீங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவீர்கள். மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனை வழங்கப்படும். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது உங்களுக்கு CRED ரிவார்டு நாணயங்கள் வழங்கப்படுகின்றன. பில்களில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு நாணயத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்.

மேலும் இந்த நாணயங்களை பயன்படுத்தி பல்வேறு விதமான வெகுமதிகளை சேகரிக்கலாம். இந்த வெகுமதிகள் நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடிகள் பெற பயன்படும். மேலும் நீங்கள் சேகரிக்கும் நாணயங்களை பொறுத்து பணத்தை திரும்பப் பெறும் சலுகையான ‘கில் தி பில்’ பிரிவில் கேஷ் பேக்குகளும் வழங்கப்படும். இந்த கேஷ் பேக் பணம் நீங்கள் ஆப்ஸ்வுடன் இணைத்திருக்கும் வங்கி கணக்கிற்கே நேரடியாக சென்று விடும். பொதுவாக, 1000 CRED நாணயங்களைபெற்றால் உங்கள் கிரெடிட் கார்டில் ரூ.5 முதல் ரூ 10 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

Paytm பயன்பாடு அதன் தளத்தைப் பயன்படுத்தி ரூ.2,500 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில் தொகையை முதன் முதலாக செலுத்தும் நபருக்கு 1000 Paytm புள்ளிகளை வழங்குகிறது. இந்த புள்ளிகளை கொண்டு கேஷ்பேக் மற்றும் சலுகைகளை நீங்கள் பெறலாம். தேவைப்பட்டால் ஆப் மூலம் பில் செலுத்துதலுக்காக கிரெடிட் கார்டு விவரங்களை சேமிக்க முடியும். பரிவர்த்தனையை முடிக்க நீங்கள் கட்டண விவரங்களை உள்ளிட வேண்டும்.PhonePe -ல் கட்டணம் செலுத்தும்போது மற்ற ஆப்ஸ்களை போன்ற கிரெடிட் கார்டு விவரங்களை நீங்கள் சேமிக்க தேவையில்லை. நீங்கள் உங்களது நெட்வொர்க்கை (விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டைனர்கள் மற்றும் ரூபே) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் UPI ஐ பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். திகிலும் உங்களுக்கு புள்ளிகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்கள் உள்ளது.

எப்படி வேலை செய்கிறது :

CRED உங்கள் செலவு முறைகளை பகுப்பாய்வு செய்து கிரெடிட் கார்டில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்த விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. மேலும் கட்டணங்கள் பற்றி ஆரம்பத்தில் உங்களுக்குத் தெரியவில்லை அல்லது கிரெடிட் கார்டு பில்களில் எதிர்பாராத கட்டணம் (வருடாந்திர பராமரிப்பு கட்டணம், அந்நிய செலாவணி கட்டணம் போன்றவை) வசூலிப்பு போன்ற தகவலை வழங்குகிறது.

உங்கள் ஆப்ஸ்வுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மின்னஞ்சல் ஐடியிலிருந்து இந்த எல்லா தகவல்களையும் பெற்று கொள்கிறது. ஆப்ஸ்களில் உங்கள் கணக்கை நீங்கள் பதிவு செய்யும் போது உங்களது தகவலை பெற ஏற்கனவே நீங்கள் ஒப்புதல் அளித்திருப்பீர்கள். Paytm, phonepay  பயன்படுத்தும் போது நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இந்த ஆப்ஸ்களுக்கு கிரேடிட் ஸ்கோர் தேவையில்லை மேலும் PhonePeல் பில் செலுத்தும் போது உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் சேமிக்கப்படாது.

ஆப்ஸ்கள் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் :

இதுபோன்ற ஆப்ஸ்கள் மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது வங்கி கணக்குகள் விவரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் இணைக்கப்பட்டுவதால் பாதுகாப்பு குறித்து கவனம் தேவைப்படுகிறது. மேலும் உங்கள் செலவுகள் மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கைகளை பகுப்பாய்வு செய்வதற்கான உங்கள் மின்னஞ்சல் செய்திகளை காண உங்கள் மின்னஞ்சல் கணக்கை அணுக CRED அனுமதி கோருகிறது.

இதுகுறித்து பேசிய ரூபே டிப்பின் நிறுவனர் ஆதர்ஷ் தம்பி, "உங்கள் தகவல்கள் ஹேக் செய்யப்படலாம். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸை அணுகும் ஹேக்கர்கள் தடுக்க முடியாது" என கூறினார்.  உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றவும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஹேக்கர்கள் விதிக்கலாம்.  உங்கள் எல்லா மின்னஞ்சல்களையும் முழுமையான படிக்க மட்டுமே முடியும் வகையில் மாற்றியமைக்க கூட முடியும் என அவர் தெரிவித்தார்.

ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட்.இன் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ராமலிங்கம் இதுகுறித்து கூறுகையில், தோல்வியுற்ற பண பரிவர்த்தனைகள் பற்றி  பயனர்கள் சமூக ஊடகங்களில் பல புகார்களை எழுப்பியுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டது மற்றும் வங்கிக்கு தொகைகளை மாற்றுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது என கூறினார். மேலும்  “உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்த ஒரு சிறிய வங்கியில் கணக்கு இருந்தால், நீங்கள் எப்போதாவது இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் ”என்று தம்பி கூறுகிறார்.உங்கள் கிரெடிட் கார்டை CRED ஆப்ஸ்சில் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் கிரெடிட் கார்டு பில்களை இந்த ஆப் வழியாக செலுத்தவில்லை என்றால் அது தொடர்ந்து நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களாக காட்டும். பின்னர் அது மேடையில் செலுத்த வேண்டிய கட்டணமாக தொடர்ந்து பிரதிபலிக்கும். இதுகுறித்து பேசிய CREDன் செய்தித் தொடர்பாளர் "CRED ஆப்பிற்கு வெளியே கட்டணங்களை செலுத்தினாலும் தடையற்ற அனுபவத்தை உருவாக்க நாங்கள் செயல்படுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

கிரெடிட் கார்டு பில்களை மொபைல் ஆப்ஸ் வழியாக நீங்கள் செலுத்த விரும்பினால் அதில் இருக்கும் அபாயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தரவு திருட்டு பற்றி நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்கிறீர்கள் என்றால் கிரெடிட் கார்டு பில்களை திருப்பிச் செலுத்த நெட் பேங்கிங், நெஃப்ட், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து தானாக செலுத்தும் வசதி போன்றவற்றை தேர்ந்தெடுத்து பணம் செலுத்துங்கள்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading