முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஒன்பிளஸின் அதிரடி... Hasselblad உடன் கரம்கோர்ப்பு... தரமான சம்பவம் மக்களே!

ஒன்பிளஸின் அதிரடி... Hasselblad உடன் கரம்கோர்ப்பு... தரமான சம்பவம் மக்களே!

ஒன்பிளஸ் Hasselblad உடன் கரம்கோர்ப்பு

ஒன்பிளஸ் Hasselblad உடன் கரம்கோர்ப்பு

ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் வந்தபிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக்கி சேகரித்து வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்மார்ட்போன் சந்தையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம், கேமராவின் தரத்தை உயர்த்துவதற்காக முன்னணி நிறுவனமான ஹேஸல்பிளாடுடன் (Hasselblad) கரம்கோர்த்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் வந்தபிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக்கி சேகரித்து வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், கேமரா மற்றும் லென்ஸ் தொடர்பான புதிய அப்டேட்களையும், தரத்தையும் நாளுக்கு நாள் உயர்த்தி வழங்கி வருகின்றனர். ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் கடுமையான போட்டி காரணமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய அம்சங்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அந்தவகையில், ஸ்மார்ட் போன் சந்தையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு புதிய மொபைல் சீரிஸ் வெளியீட்டிலும் பிரம்மாண்டத்தை நிகழ்த்தி வருகிறது. விரைவில் அந்த நிறுவனம் வெளியிட இருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 9 சீரிஸின் அப்டேட் தகவல், ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமாரா நெக்ஸ்ட் ஜெனரேசன் அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, அந்த நிறுவனம் புகைபடத்துறையில் கேமரா மற்றும் லென்ஸூகளை உருவாக்குவதில் 80 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஹேஸல்பிளாடு நிறுவனத்துடன் கரம்கோர்த்துள்ளது.

ஆன்லைனில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் புகைப்படத்தில், கேமராவுக்கு அருகில் ஹேஸல்பிளாடு நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும்பட்சத்தில், புகைப்படங்களின் தரம் வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது. ஹேஸல்பிளாடு நிறுவனத்துடன் ஒன்பிளஸ் நிறுவனம் கரம்கோர்தது மிகப்பெரிய சர்ப்ரைஸ் எனக் கூறியுள்ள வாடிக்கையாளர்கள், ஒன்பிளஸ் 9 சீரிஸ் வெளியீட்டிற்காக காத்துக்கிடக்கின்றனர். இதனால், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 9 சீரிஸின் வரவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ஹேஸல்பிளாடு நிறுவனத்தின் வரவு. விண்வெளித்துறையில் கோலோச்சும் நாசாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக ஹேஸல்பிளாடு திகழ்ந்து வருகிறது. நிலவில் மனிதன் முதன்முதலாக கால்தடம் பதித்தபோது ஹேஸல்பிளாடு நிறுவனத்தின் லென்ஸில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது, உலகம் முழுவதும் பல வரலாற்று நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், முக்கிய தருணங்கள் என அனைத்தும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டது ஹேஸல்பிளாடு நிறுவனத்தின் லென்ஸில் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைத்துறை முதல் உள்ளூர்வரை இந்த நிறுவனத்தின் லென்ஸ்கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. காரணம், இந்த நிறுவனத்தின் லென்ஸில் எடுக்கப்படும் புகைப்படங்களின் குவாலிட்டி உட்சபட்ச தரத்தை கொடுக்கிறது. நாசாவின் அப்போலோ 11, நிலவு பரிசோதனைக்கும் இந்த நிறுவனத்தின் லென்ஸ் பயன்படுத்தப்பட்டது. புகைப்பட துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஹேஸல்பிளாடுடன் கரம்கோர்க்கும்போது ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என திட்டமிட்ட ஒன்பிளஸ் நிறுவனம், அதனை அடுத்த சீரியஸாக வெளிவர இருக்கும் ஒன்பிளஸ் 9 -லிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அந்த நிறுவனத்தின் திட்டமும் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 3 ஆண்டுகள் ஹேஸல்பிளாடுடன் ஒப்பந்தமிட்டுள்ள ஒன்பிளஸ் நிறுவனம், இந்த காலத்தில் புகைப்படத்துறையில் எப்பெக்ட், கலர் சேஞ்சிங், எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. இதனால், ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் புகைப்பட குவாலிட்டியும் ஒன்றையொன்று விஞ்சியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் 23 அன்ரு இரவு 8.30 மணிக்கு நடக்க உள்ள வெளியீட்டு நிகழ்ச்சியை இங்கே காணலாம்.

First published:

Tags: One plus