Home /News /technology /

விரைவில் அறிமுகமாகிறது OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்.. சிறப்பம்சங்கள் என்ன.?

விரைவில் அறிமுகமாகிறது OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்.. சிறப்பம்சங்கள் என்ன.?

அறிமுகமாகிறது OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்

அறிமுகமாகிறது OnePlus 10 Pro ஸ்மார்ட் ஃபோன்

ப்ரீ-ரிஜிஸ்ட்ரேஷன் லிஸ்ட்டிங் (pre-registration listing ) வரும் ஜனவரி 11 அன்று சீனாவில் புதிய ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 10 ப்ரோ அறிமுகப்படுத்தப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது.

OnePlus நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 10 ப்ரோ ( OnePlus 10 pro) இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே OnePlus 10 pro மொபைலின் ஃபர்ஸ்ட் லுக்கை OnePlus நிறுவனத்தின் இணை நிறுவனர் (co-founder) Pete Lau சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார். இவர்  பகிர்ந்துள்ள டீஸர் ஃபோட்டோ வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனில் டிஜிட்டல் மீடியம் ஃபார்மெட் கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள Hasselblad-உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை ஒன்பிளஸ் 10 ப்ரோ கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதற்கிடையே ப்ரீ-ரிஜிஸ்ட்ரேஷன் லிஸ்ட்டிங் (pre-registration listing ) வரும் ஜனவரி 11 அன்று சீனாவில் புதிய ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 10 ப்ரோ அறிமுகப்படுத்தப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதனிடையே ட்விட்டரில் சமீபத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ள ஒன்பிளஸ் 10 ப்ரோ தொடர்பான வீடியோவில் டிவைஸின் பின்புறம் காண்பிக்கப்படுவதற்கு முன், மேல் இடதுபுறத்தில் ஹோல்-பஞ்ச் செல்ஃபி கேமராவுடன் ஸ்கிரீனை காண்பிப்பதன் மூலம் அந்த வீடியோ தொடங்குகிறது.

பெரிய கேமரா பம்ப் மற்றும் Hasselblad பிராண்டிங்குடன் கூடிய பிளாக் கலர் மொபைல் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பிளாக் கலர் தவிர எமரால்டு ஃபாரஸ்ட் கலரிலும் ஒன்பிளஸ் 10 ப்ரோ காணப்படுகிறது. இந்த மொபைல் இப்போது சீனாவில் ப்ரீ-ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. Oppo store, JD.com மற்றும் Tmall உள்ளிட்ட பல்வேறு ரீட்டெயில் வெப்சைட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. 8GB + 128GB, 8GB + 256GB, மற்றும் 12GB + 256GB ஆகிய 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்த ஃபோன் கிடைக்கும் என்பதை JD.com வெளிப்படுத்துகிறது.

ALSO READ |  டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள்

OnePlus 10 Pro பற்றி இதுவரை நாம் அறிந்த தகவல்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் ஸ்பெசிஃபிகேஷன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..

ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் Android 12-அடிப்படையிலான OxygenOS 12-ல் இயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இது 6.7-inch QHD+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்க கூடும். ஒன்பிளஸ் 10 ப்ரோ ஃபோனானது LTPO 2.0 தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது.



இது Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது 12GB வரை LPDDR5 ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜுடன் வரலாம். பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள டிரிபிள் கேமரா செட்டப்பில் 48 மெகாபிக்சல் ப்ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

ALSO READ |  தமிழ் உள்ளிட்ட இந்திய பிராந்திய மொழிகளில் WhatsApp-ஐ பயன்படுத்துவது எப்படி.!!

முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் பெறும். மேலும் இந்த மொபைல் டஸ்ட் அன்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸிற்காக IP68- சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும். இந்த மொபைலின் பேட்டரி கெப்பாசிட்டி 5,000mAh-ஆக இருக்கும்.

OnePlus 10 Pro ஸ்மார்ட் போனின் பரிமாணங்கள் 163 × 73.8 x 5mm ஆகும். மேலும் இந்த மொபைல் டூயல் நானோ சிம்களை சப்போர்ட் செய்யும். USB Type-C audio, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Oneplus, Technology

அடுத்த செய்தி