செப்டம்பர் 10-ம் தேதி புதிய ஐஃபோன் ரிலீஸ்! - உறுதியளித்த ஆப்பிள்

நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஆப்பிள் டிவி புதிய டிஸ்னி+ சேவையுடன் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் வீடியோவுக்கு எல்லாம் போட்டியாக அறிமுகம் ஆகலாம்.

Web Desk | news18
Updated: August 30, 2019, 5:00 PM IST
செப்டம்பர் 10-ம் தேதி புதிய ஐஃபோன் ரிலீஸ்! - உறுதியளித்த ஆப்பிள்
நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஆப்பிள் டிவி புதிய டிஸ்னி+ சேவையுடன் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் வீடியோவுக்கு எல்லாம் போட்டியாக அறிமுகம் ஆகலாம்.
Web Desk | news18
Updated: August 30, 2019, 5:00 PM IST
2019-ம் ஆண்டுக்கான புதிய ஐஃபோன் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிளின் புதிய ஐஃபோன் உடன் iOS 13, iPadOS, watchOS and macOS ஆகிய புதிய சாஃப்ட்வேர்கள் அறிமுகம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆப்பிள் பூங்கா வளாகத்தில் செப்டம்பர் 10-ம் தேதி 10 மணி அளவில் அறிமுக விழா நடைபெற உள்ளது.

ஐஃபோன் XS, ஐஃபோன் XS மேக்ஸ் மற்றும் ஐஃபோன் XR வெளியீட்டுக்கான வரிசையின் முன் நிற்கின்றன. இவற்றுள் எது வெளியாகும் எந்த வரிசையில் வெளியீடு இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய வெளியீடுகளில் ஏதாவது ஒரு ஐஃபோன் ஆப்பிள் பென்சில் உடன் வரலாம் எனத் தெரிகிறது.


பெரும் சாஃப்ட்வேர் வெளியீடுகளும் ஆப்பிள் ரசிகர்களைக் கவரக் காத்திருக்கிறது. ஐஃபோன் மற்றும் ஐபாட் டச்-களுக்கான iOS 13, ஐபேட்-க்கான iPadOS, மேக் சாதனங்களுக்கான macOS மற்றும் நியூ ஜென் ஆப்பிள் வாட்ச்-க்கு ஏற்ற watchOS ஆகிய சாஃப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்கலாம்.

ஐஃபோன் தவிர்த்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5, புதிய ஐபேட் ப்ரோ, புதிய மேக்புக் ஏர் ஆகியனவும் வெளியாகலாம். நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஆப்பிள் டிவி புதிய டிஸ்னி+ சேவையுடன் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் வீடியோவுக்கு எல்லாம் போட்டியாக அறிமுகம் ஆகலாம்.

மேலும் பார்க்க: இந்திய விமானப் பயணங்களில் ’இந்த’ லேப்டாப் கொண்டு செல்ல மட்டும் தடை!

Loading...

Watch Also:
First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...