Home /News /technology /

எச்சரிக்கை! ஐஃபோன், ஐபேட், மேக்புக் பயனாளர்ககள் இந்த வெர்சன் சாப்ட்வேரை தவிர்க்கவும்

எச்சரிக்கை! ஐஃபோன், ஐபேட், மேக்புக் பயனாளர்ககள் இந்த வெர்சன் சாப்ட்வேரை தவிர்க்கவும்

ஐஓஎஸ், ஐஃபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் குரோம் ஓஎஸ் ஆகியவற்றை முந்தைய பழைய வெர்சன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பல்லடுக்கு அபாயங்களை எதிர்கொண்டுள்ளனர்

ஐஓஎஸ், ஐஃபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் குரோம் ஓஎஸ் ஆகியவற்றை முந்தைய பழைய வெர்சன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பல்லடுக்கு அபாயங்களை எதிர்கொண்டுள்ளனர்

ஆப்பிள் சாஃப்ட்வேரில் உள்ள குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ஆப்பிள் ஐஓஎஸ் 15.6 என்ற அப்டேட் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆப்பிள் ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக்புக் போன்றவற்றைப் பழைய சாஃப்ட்வேர் வெர்சன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு குறித்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்ப்யூட்டர் எதிர்வினை குழு (Cert - In) சார்பில் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    ஐஓஎஸ், ஐஃபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் குரோம் ஓஎஸ் ஆகியவற்றை முந்தைய பழைய வெர்சன்களில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பல்லடுக்கு அபாயங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று செர்ட் இன் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆப்பிள் சாஃப்ட்வேரில் உள்ள குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அந்த நிறுவனத்தின் சார்பில் ஆப்பிள் ஐஓஎஸ் 15.6 என்ற அப்டேட் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், பாதுகாப்பு அப்டேட் தொடர்பான நீண்ட தகவல்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. குறிப்பாக, டிவி ஆப் மூலமாக லைவ் ஸ்போர்ட்ஸ் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதி இடம் பெற்றுள்ளது.

    Also Read :முன்னணி மியூசிக் செயலிகளுக்கு போட்டியாகக் களமிறங்கும் டிக்டாக் மியூசிக்.!

    இதேபோன்ற குறைபாடுகளுக்குத் தீர்வு காணும் வகையிலான அப்டேட் ஒன்றை கூகுள் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. தற்போது வரையில் ஐஓஎஸ் 15.5 சாஃப்ட்வேர் அல்லது அதற்கு முந்தைய வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக சமீபத்திய வெர்சனுக்கு மாற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் யூசர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்

    தற்போதைய பாதுகாப்பு அப்டேட் வெர்சனுக்கு மாறாமல், பழைய வெர்சனுடன் உள்ள வாடிக்கையாளர்கள், ஆபத்துகளை கொண்ட இணையப் பக்கங்கள் அல்லது இணையதளத்தைப் பார்வையிடும்போது ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில இணையதளங்களில் உள்ள பக்ஸ் என்பது உங்கள் டிவைஸில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளை எளிதில் உடைத்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மட்டுமல்லாமல் மேக் ஓஎஸ், பிக் சர், மானட்டரி போன்ற தளங்களிலும் இதேபோன்ற அபாயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    Also Read :உலகம் முழுவதும் பல விமானங்களை ரத்து செய்யும் நிறுவனங்கள் - காரணம் என்ன? இதோ முழு விபரம்!

    கூகுள் குரோம் வாடிக்கையாளர்களையும் பாதிக்கும்

    கூகுள் குரோம் வாடிக்கையாளர்களும் பழைய வெர்சன்களை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், உங்களுடைய தரவுகளை ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், குரோம் ஓஎஸ் எல்டிஎஸ் 96.0.4664.215 என்ற வெர்சனுக்கு அப்டேட் செய்வதன் மூலமாக இந்த அபாயங்களை முறியடிக்க முடியும்.

    ஐஓஎஸ்-இன் கடைசி அப்டேட்

    ஆப்பிள் நிறுவனத்தின் 15 சீரீஸ் அப்டேட் வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ளது 15.6 தான் இறுதி அப்டேட்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஐஓஎஸ் 16 தயாரித்து வெளியிடும் முனைப்பில் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 14 ஃபோனும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஃபோன் பயனாளர்களுக்கு புதிய வசதிகளைக் கொடுப்பதாக அது அமையும் எனத் தெரிகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Apple IOS, Apple ipad, Apple iphone

    அடுத்த செய்தி