ஆண்டுக்கு 500 லட்சம் போன்களை உற்பத்தி செய்த ப்ளாக்பெரி... சந்தையைவிட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!

ஒருகாலத்தில் ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம் ப்ளாக்பெரி.

ஆண்டுக்கு 500 லட்சம் போன்களை உற்பத்தி செய்த ப்ளாக்பெரி... சந்தையைவிட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!
ப்ளாக்பெரி
  • News18
  • Last Updated: February 4, 2020, 6:46 PM IST
  • Share this:
ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையைவிட்டே வெளியேறுவதாக ப்ளாக்பெரி நிறுவனம் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒருகாலத்தில் ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம், ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு போன்றவற்றின் முன்னோடி என்றே கூறும் அளவு பிரபலம் வாய்ந்த ப்ளாக்பெரி நிறுவனம் திடீரென இனி ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

நிறுவனத்தை கைமாற்றுகிறதா என்பது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்றாலும் சந்தையைவிட்டே மொத்தமாக ப்ளாக்பெரி வெளியேறுவது போன்ற அறிவிப்பாகத்தான் இது பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொள்ளாததும் ப்ளாக்பெரி நிறுவனத்துக்கும் ஒரு தடையாக மாறிவிட்டதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் மெசெஜ் செய்ய ஈமோஜிக்கள் அறிமுகம்... பயனாளர்கள் வரவேற்பு
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்