இந்தியர்கள் வாங்க விரும்பும் போன் எது? தேசிய அளவிலான சர்வே முடிவுகள் வெளியீடு!

ஒன்ப்ளஸ் போன் தன்னுடைய 60 சதவிகித வாடிக்கையாளர்களை மீண்டும் தக்கவைத்துக் கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியர்கள் வாங்க விரும்பும் போன் எது? தேசிய அளவிலான சர்வே முடிவுகள் வெளியீடு!
ஒன்ப்ளஸ்
  • News18
  • Last Updated: October 1, 2019, 8:23 PM IST
  • Share this:
ஸ்மார்ட்போன் உலகின் மிகப்பெரும் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியர்களை அதிகம் கவர்ந்த, அநேகர் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன் குறித்த ‘கிரேட் இந்தியன் ஸ்மார்ட்போன்’ சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. மக்களின் தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ற தொழில்நுட்ப உலகமும் விரிவாகிக்கொண்டே உள்ளது. இந்த சூழலில் இந்தியர்கள் அதிகம் விரும்பும் போன் எது? என்ற கேள்விக்கான விடையை இந்த சர்வே முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

91mobiles.com என்ற இணையதளம் மூலம் சுமார் 15ஆயிரம் பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. தேசிய அளவில் கிரேட் இந்தியன் ஸ்மார்ட்போன்’ சர்வே முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டதாகவே உள்ளன. இதன் மூலமே ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களை மதிப்பாய்வு செய்துகொள்கின்றனர். அதிகப்படியான ஆஃபர், தள்ளுபடிகளையும் தாண்டி இந்திய மக்களை அதிகம் கவர்ந்த ஸ்மார்ட்போன் ஆக ஒன்ப்ளஸ் உள்ளது.


இந்திய மக்களின் முக்கிய தேவை ஆக வாட்டர்ப்ரூஃப் போன், வயர்லெஸ் சார்ஜிங், வேகமான சார்ஜிங், இரண்டு அல்லது அதற்கு மேம்பட்ட கேமிரா, பாப் அப் கேமிரா ஆகியன உள்ளன. சீன ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் போனை வாங்கவே இந்தியர்கள் விரும்புகின்றனர். மக்களைக் கவர்ந்த போன் ஆகவுமே இந்த போன் தான் உள்ளது.

ஒன்ப்ளஸ் பயனாளர்களின் மனதைக் கவர்ந்த, நம்பகத்தன்மையை ஈட்டிய போன் ஆகவும் ஒன்ப்ளஸ் உள்ளது. ஒன்ப்ளஸ் போன் தன்னுடைய 60 சதவிகித வாடிக்கையாளர்களை மீண்டும் தக்கவைத்துக் கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பார்க்க: DM மூலம் தேவையில்லாத தொல்லைகளா?- தீர்வுக்கான புதிய அப்டேட் கொண்டு வந்த ட்விட்டர்!தீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை
First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்