இஸ்ரோவின் அடுத்த வெற்றி... விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது

விக்ரம் லேண்டரின் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை அதிகாலை 3.30 முதல் 4.30 மணிக்குள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: September 3, 2019, 11:48 AM IST
இஸ்ரோவின் அடுத்த வெற்றி... விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது
விக்ரம் லேண்டர்
news18
Updated: September 3, 2019, 11:48 AM IST
நிலவில் தரையிறங்கும் லேண்டர் விக்ரமின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலவிற்கும் லேண்டருக்குமான தூரம் 104 கிலோமீட்டராக குறைந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம், ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியிலுருந்து விலகி, நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.


கடந்த 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2-வின் சுற்றுவட்டப்பாதையை இஸ்ரோ தொடர்ந்து மாற்றியமைத்து வந்தது. பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் நேற்று மதியம் 1.15 மணியளவில் தனியாக பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது.

இதனால் நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரம் 119 கிலோ மீட்டர் ஆனது. இந்நிலையில் இன்று காலை 8.50-க்கு இந்த தூரம் மேலும் குறைக்கப்பட்டு 104 கிலோமீட்டர் ஆக்கப்பட்டுள்ளது. 4 நொடிகளில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆர்பிட்டரும் லேண்டரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. அத்துடன் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு நாளை அதிகாலை 3.30 முதல் 4.30 மணிக்குள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Also watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...