Home /News /technology /

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு - விரைவில் வருகிறது புதிய மசோதா!

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு - விரைவில் வருகிறது புதிய மசோதா!

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் விரிவான சட்டக் கட்டமைப்பிற்கு’ பொருந்தக்கூடிய மசோதா பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் விரிவான சட்டக் கட்டமைப்பிற்கு’ பொருந்தக்கூடிய மசோதா பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது  இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்களைக் கவலையடையச் செய்த மற்றும் கிடுக்கு பிடி போட்ட தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை (Personal Data Protection Bill) மக்களவையில் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

  கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, சுமார் 4 ஆண்டுக்கால விவாதங்களுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் மக்களவையில் குறிப்பிட்ட மசோதாவைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு மசோதா திரும்பப்பெறப்பட்டது. 99 பிரிவுகளைக் கொண்ட மசோதாவில் சுமார் 81 திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிந்துரைத்ததால், அரசாங்கம் இந்த மசோதாவை வாபஸ் பெற்று உள்ளது.

  தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ் விரிவான சட்டக் கட்டமைப்பிற்கு’ பொருந்தக்கூடிய மசோதா பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்றார். இதற்கிடையே மசோதா வாபஸ் பற்றிப் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த மசோதா மீதான நாடாளுமன்றக் குழு அறிக்கை, நவீன டிஜிட்டல் தனியுரிமைச் சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட பல சிக்கல்களைக் கண்டறிந்துள்ளது. தனியுரிமை என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமை. மேலும் டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உலகளாவிய தரநிலை சட்டங்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

  Also Read :சேதமடைந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல்களை புத்துயிர் பெற வைக்கும் புதிய தொழில்நுட்பம்

  2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய டேட்டா ஃப்ளோஸிற்கு எதிராக கடும் விதிமுறைகளை மற்றும் நிறுவனங்களிடமிருந்து யூஸர்களின் டேட்டாக்களை பெற இந்திய அரசுக்கு அதிகாரங்களை வழங்க முன்மொழிந்தது. எனினும் புதிய விரிவான சட்டக் கட்டமைப்பின் தேவைக்கு ஏற்ப பல திருத்தங்களை நாடாளுமன்ற குழு பரிந்துரைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு நல மேம்பட்ட புதிய மசோதாவை உருவாக்கத் தொடங்கியுள்ளது, இது விரைவில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதிய மசோதாவை அங்கீகரித்து சட்டமாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் கூறினார்.

  2019-ல் அறிமுகம் செய்யப்பட்ட தனியுரிமை மசோதா இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்க மற்றும் தரவு பாதுகாப்பு ஆணையத்தை நிறுவவும் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இது பெரிய டெக் நிறுவனங்களிடையே அவர்களின் இணக்கச் சுமை மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் தேவைகளை அதிகரிக்கக் கூடும் என்ற கவலையை எழுப்பியது. இதனிடையே புதிய மசோதா குறித்து ஸ்டேக் ஹோல்டர்களுடன் கலந்தாலோசிப்பது குறித்து கேள்விக்கு, பழைய மசோதாவை மறு ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு ஏற்கனவே தொழில்துறை கருத்துக்களைச் சேகரித்து விட்டதால், செயல்முறை நீளமாக இருக்காது என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார்.

  Also Read :ஜூன் மாதம் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - ‘ஆபத்தான’ கணக்குகளை எப்படி புகார் செய்வது.?

  முக்கிய தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது  இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வருவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது. அதே நேரம் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இந்தியத் தொழில்நுட்பத் துறைக்காக முன்மொழிந்துள்ள பல தனித்தனி விதிமுறைகள் குறித்து கவலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Personal Data Protection Bill விரைவில் சமகால மற்றும் டிஜிட்டல் தனியுரிமை சட்டங்கள் உட்பட உலகளாவிய நிலையான சட்டங்களின் விரிவான கட்டமைப்பால் மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பெரிய டெக் நிறுவனங்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Janvi
  First published:

  Tags: Personal data theft

  அடுத்த செய்தி