ஆப்பிள் (Apple) சமீபத்தில் iOS பயன்பாடுகளுக்கான தனது ஆப் ஸ்டோரில் பிரைவசி லேபிள்களை (privacy labels) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் ஆப் டெவலப்பர்கள் தங்களது யூசர்களிடம் இருந்து சேகரிக்கும் எல்லா தரவையும் வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. மேலும் அந்த தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறது. ஐபோன்களுக்கான iOS 14 அப்டேட்டுடன், ஆப் டெவலப்பர்கள் நீண்ட மற்றும் புரிந்துகொள்ள முடியாத தனியுரிமைக் கொள்கைகளுக்கு பின்னால் மறைய முடியாது என்பதையும், அதற்கு பதிலாக ஒரு இலவச ஆப்களை வழங்கும் போது உங்கள் தனிப்பட்ட தரவோடு பரிவர்த்தனை செய்ய முடியாது என்பதையும் ஆப்பிள் உறுதி செய்துள்ளது.
அந்த வகையில் சிக்னல் (Signal) , ஐமெசேஜ் (iMessage) மற்றும் டெலிகிராம் (Telegram) உள்ளிட்ட பிற பிரபலமான மெசேஜிங் பயன்பாடுகளுடன் ஒப்பிடும் போது வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) ஏராளமான யூசர்களின் தகவல்களையும் தரவையும் சேகரிப்பதாக ஆப்பிள் பிரைவசி லேபிள்களின் அப்டேட் மூலம் தெரிய வந்துள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான இரண்டு ஆப்களும் பயன்பாட்டுத் தரவு மற்றும் இருப்பிட விவரங்களைச் சேகரிக்கின்றன. அவை பிற ஆப்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு மாறாக, ஆப் ஸ்டோரில் சிறப்பிக்கப்பட்ட பிரைவசி விவரங்களின்படி, எந்தவொரு யூசர் டேட்டாக்களையும் சேகரிக்காத மிகவும் தனிப்பட்ட மெசேஜிங் ஆப்பாக "சிக்னல் (Signal)" விளங்கியுள்ளது. பிரைவசி லேபிள்களைக் காண்பிக்கும் ஆப்பிளின் இந்த நடவடிக்கைக்கு பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆப் ஸ்டோரில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் யூசர் டேட்டா சேகரிப்பு என்று வரும்போது பேஸ்புக் மெசஞ்சர் முன்னிலை வகிக்கிறது.
அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு ஆப்களும் சேகரிக்கும் தரவுகளின் பட்டியலில் யூசர்களின் பர்ச்சேஸ் ஹிஸ்டரி, நிதித் தகவல், இருப்பிட விவரங்கள், காண்டாக்ட்ஸ், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் டேட்டா யூசேஜ் ஆகியவை அடங்கும். இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, வாட்ஸ்அப்பின் இணை நிறுவனராக பணியாற்றிய பிரையன் ஆக்டன், பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை வாங்கிய பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர் மோக்ஸி மார்லின்ஸ்பைக் உடன் "சிக்னல்" அறக்கட்டளையை உருவாக்க உருவாக்கினார். சிக்னல் மெசேஜிங் ஆப் வாட்ஸ்அப் முன்பு இருந்ததைப் போன்றது மற்றும் சிறந்த பிரைவசியை வழங்குகிறது. இதன் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன், ஓபன் சோர்ஸ் சிக்னல் நெறிமுறையால் இயக்கப்படுகிறது. இருப்பினும், சிக்னல் என்பது இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக அறியப்பட்ட ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வாட்ஸ்அப்பின் அனைத்து அம்சங்களையும் சிக்னல் வழங்குகிறது. தற்போது, ஆப்பிள் பிரைவசி லேபிள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வாட்ஸ்அப், டெலிகிராம், ஐமேசேஜ், சிக்னல் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவை என்ன தரவுகளை சேகரித்துள்ளது என்பதை பார்ப்போம்.
இந்த ஆப் யூசர்களின் எந்த விதமான தரவுகளையும் சேகரிக்கவில்லை. சிக்னல் ஆப்-ல் பதிவு செய்ய உங்கள் மொபைல் எண் மட்டுமே தேவை. ஆனால் இந்த செயலி உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் அடையாளத்துடன் இணைக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
டெலிகிராம் (Telegram)
இந்த செயலி ஒரு யூசரின் 3 விதமான தரவுகளை சேகரிக்கிறது. அவை, தொடர்பு கொள்ளும் தகவல், காண்டாக்ட்ஸ், யூசர் ஐடி ஆகியவை ஆகும்.
ஐமெசேஜ் (iMessage)
இந்த ஆப் உங்களின் மெயில் ஐடி, தொலைபேசி எண், சர்ச் ஹிஸ்டரி, டிவைஸ் ஐடி போன்ற தரவுகளை சேகரிக்கிறது.
வாட்ஸ்அப் (Whatsapp)
இந்த மெசேஜிங் ஆப் சேகரிக்கும் தரவுகள், டிவைஸ் ஐடி, யூசர் ஐடி,விளம்பர தரவுகள்,சர்ச் ஹிஸ்டரி, கோயர்ஸ் லொகேஷன், தொலைபேசி எண், மெயில் ஐடி, காண்டாக்ட்ஸ், ப்ராடக்ட் இன்டராக்சன், கிராஷ் டேட்டா, பெர்ஃபாமென்ஸ் டேட்டா, பிற கண்டறியும் தரவுகள், பேமெண்ட் இன்பர்மேஷன், கஸ்டமர் சப்போர்ட், அதர் யூசர் காண்டாக்ட்ஸ் ஆகியவை ஆகும்.
பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger)
பேஸ்புக் மெசஞ்சரைப் பொறுத்தவரை, தரவு பட்டியல் மிக நீளமானது மற்றும் ஒரு ஆப் சேகரிக்கக்கூடிய எல்லா வகையான தனிப்பட்ட யூசர் தரவையும் உள்ளடக்கியுள்ளது. அவை பர்ச்சேஸ் ஹிஸ்டரி, பிற நிதி தகவல், துல்லியமான லொகேஷன், கோயர்ஸ் லொகேஷன், பிஸிக்கல் அட்ரஸ் , மெயில் அட்ரஸ், பெயர், தொலைபேசி எண், அதர் யூசர் காண்டாக்ட் இன்பர்மேஷன், காண்டாக்ட்ஸ், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள், விளையாட்டு உள்ளடக்கம், மற்ற யுஸரின் உள்ளடக்கம், சர்ச் ஹிஸ்டரி, பிரவுசிங் ஹிஸ்டரி, யூசர் ஐடி, டிவைஸ் ஐடி, ப்ராடெக்ட் காண்டாக்ட், விளம்பர தரவு, அதர் யூசேஜ் டேட்டா, கிராஷ் டேட்டா, பெர்ஃபாமென்ஸ் டேட்டா, பிற கண்டறியும் தரவுகள், பேமெண்ட் இன்பர்மேஷன், கஸ்டமர் சப்போர்ட், அதர் யூசர் காண்டாக்ட்ஸ், ஆரோக்கியம், உடற்தகுதி, ஆடியோ தரவு, சென்சிடிவ் இன்பர்மேஷன் ஆகியவை ஆகும்.