ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Telegram : டெலிகிராமின் அசத்தலான புதிய அப்டேட்கள்..!

Telegram : டெலிகிராமின் அசத்தலான புதிய அப்டேட்கள்..!

டெலிகிராம்

டெலிகிராம்

சமீபத்திய அப்டேட்டுகளின் படி டெலிகிராம் அனைத்து சாட்களுக்கும் பேமெண்ட் 2.0 ஐக் கொண்டு வர இருக்கிறது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

டெலிகிராம் இந்தியாவில் iOS மற்றும் Android பயன்பாடுகளுக்கான புதிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. சமீபத்திய அப்டேட்டுகளின் படி டெலிகிராம் அனைத்து சாட்களுக்கும் பேமெண்ட் 2.0 ஐக் கொண்டு வர இருக்கிறது. அதேபோல வாய்ஸ் சாட்களுக்கான திட்டமிடல் மற்றும் ‘மினி சுயவிவரங்கள்’, உங்கள் பிரவுசருக்கான புதிய டெலிகிராம் ஆப், ஆட்டோ டெலிட் டைமர் உள்ளிட்ட பல அம்சங்களை நிறுவனம் சேர்த்துள்ளது.

அண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் டெலிகிராம் செயலியை உபயோகிப்பவர்கள் மேற்கண்ட அனைத்து புதிய அம்சங்களையும் அனுபவிக்க செயலியின் சமீபத்திய வெர்சனை பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். செயலியை புதுப்பிக்க முறையே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோருக்குச் செல்வதன் மூலம் பயன்பாட்டின் சமீபத்திய வெர்சனை அப்டேட் செய்துகொள்ளலாம். குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு புதிய முழு அம்சங்களுடன் கூடிய டெலிகிராம் வெப் ஆப்களை சேர்த்துள்ளதாக டெலிகிராம் கூறியுள்ளது. அவை வெப் ஆப் அனிமேஷன் ஸ்டிக்கர்கள், டார்க் மோட், சாட் போல்டர்ஸ் மற்றும் பலவற்றை ஆதரிக்கிறது.

டெலிகிராம் பேமெண்ட் 2.0-வை பொறுத்தவரை, வணிகர்கள் இப்போது எந்தவொரு சாட் மூலமாகவும் கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். இது ஸ்ட்ரைப் போன்ற எட்டு ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களை நம்பியுள்ளது. அதேபோல வாங்குபவர்கள் தங்களுக்கு பிடித்த கலைஞர்கள், கடைகள் அல்லது டெலிவரி டிரைவர்களுக்கு டிப்ஸ் கொடுக்க நினைத்தாலும் அதனுடன் சேர்க்கலாம்.

Also Read : புதிய ரிமோட்டில் இந்த ஆப்சனை தூக்கிய ஆப்பிள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

டெஸ்க்டாப் ஆப் உட்பட எந்த பயன்பாட்டிலிருந்தும் பணம் செலுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வலைதளம் இதற்கு எந்தஒரு கமிஷனையும் எடுத்துக்கொள்வது அல்லது எந்தஒரு கட்டண தகவல்களை சேமிக்காது என்று டெலிகிராம் குறிப்பிட்டுள்ளது. மேலும் கிரெடிட் கார்டு தகவல் நேரடியாக பேமெண்ட் வழங்குநருக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர, ஷிப்மென்ட் தகவல் வணிகருடன் பகிரப்படுகிறது. இதன் மூலம் அவர்களால் உங்கள் பொருட்களை உங்களுக்கு அனுப்ப முடியும்.

வாய்ஸ் சாட்:  யூசர்கள் இப்போது வாய்ஸ் சாட்களை திட்டமிடலாம். அட்மின்கள் தங்கள் குரூப் அல்லது சேனலின் சுயவிவரப் பக்கத்திலிருந்து வாய்ஸ் சாட்களை திட்டமிடலாம். இதனை இயக்க Android யூசர்ஸ், டெலிகிராம் ஆப்பில் மோர் என்பதை கிளிக் செய்யவும் அல்லது ஆப்பில் தோன்றும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்> ஸ்டார்ட் வாய்ஸ் சாட் என்பதை கிளிக் செய்யவும்> வாய்ஸ் சாட்டை திட்டமிடல் (tap on more (represented by three dots) > Start Voice chat > Schedule Voice Chat) என்பதை கிளிக் செய்வதன் மூலம் இந்த அம்சத்தை பெறலாம். அதுவே IOS இல், வாய்ஸ் சாட் பட்டனை கிளிக் செய்து அதில் வாய்ஸ் சாட் திட்டமிடலை அழுத்தவும்.

Also Read : OnePlus 9 Pro கேமராவில் இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளதா ?

கூடுதலாக, வாய்ஸ் சாட் விண்டோவை விட்டு வெளியேறாமல், நீங்கள் யாருடன் அரட்டையடிக்கிறீர்கள் என்பதைப் பற்றிய சிறந்த யோசனையைப் பெற யூசர் ‘மினி சுயவிவரங்கள்’ அல்லது பயாஸைச் காண்பிக்கும். அதேபோல யூசர்கள் சாட்டில் இருந்து வெளியேறலாம் சுயவிவரப் படத்தை மாற்றலாம் மற்றும் சுயவிவரங்களை திருத்தலாம். கூடுதலாக, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இப்போது சாட்டில் இருந்தே நேரடியாக விரிவுபடுத்தலாம். இதுதவிர எப்போதும் போல, Android பயன்பாடு புதிய அனிமேஷன்களைப் பெறுகிறது.

வெப் வெர்சன்களை பொறுத்தவரை, டெலிகிராம் புதிய வெப் வெர்சன்களை டெஸ்க்டாப் அல்லது மொபைல் வழியாக அணுக முடியும் என்று கூறுகிறது. டெலிகிராம் வெப் K மற்றும் டெலிகிராம் வெப் Z ஆகிய இரண்டு வெப் ஆப்கள் 400KB அளவை கொண்டிருக்கின்றன. மேலும் தொலைபேசி ஆப்களில் இருக்கும் பல அம்சங்களை வெப் ஆப்-ம் வழங்குகிறது. குறிப்பாக அனைத்து டெலிகிராம் வெப் பதிப்புகளும் தனித்தனியாக உள்ளன. அதாவது யூசர்கள் உள்நுழைந்தவுடன், அவர்கள் தொலைபேசியை அருகில் வைத்திருக்கவோ அல்லது இணையத்துடன் இணைக்கவோ தேவையில்லை. ஆட்டோ டெலிட் டைமர் அம்சத்தை பொறுத்தவரை, நாம் பதிவிடும் மெசேஜ், புகைப்படங்கள், விடியோக்கள், வாய்ஸ் ரெகார்ட் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே நீக்கலாம். அவை நீக்கப்படுவதற்கான நேரத்தை முன்கூட்டியே தீர்மானித்துவிட வேண்டும்.

Published by:Vijay R
First published:

Tags: Android, IOS, Telegram