உலகளவில் 1 பில்லியன் டவுன்லோட்கள் செய்யப்பட்டுள்ள டெலிகிராம் செயலி - இந்தியாவில் எத்தனை சதவிகிதம்?

Telegram

வாட்ஸ்அப் செயலியை போலவே, இந்தியா டெலிகிராம் பயன்பாட்டின் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

  • Share this:
பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான டெலிகிராம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, உலகளாவிய ரீதியில் சுமார் 1 பில்லியன் யூசர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் டாப் கிளாஸ் ஆப் கிளப்பில் டெலிகிராம் இணைந்துள்ளதாக சென்சார் டவர் தெரிவித்துள்ளது.

இது குறித்து மொபைல் நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவர், டெக் க்ரஞ்சிடம் தெரிவித்ததாவது, துபாயை தலைமையிடமாகக் கொண்ட இந்த செயலி, 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஆப் பல சவால்களை சந்தித்து வந்திருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) நிறுவனம் அதன் மைல்கல்லைத் தாண்டியது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் உடனடி செய்தியிடல் ஆப்களில் முதன்மை போட்டியாளராக விளங்கும் வாட்ஸ்அப் செயலியை போலவே, இந்தியா டெலிகிராம் பயன்பாட்டின் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

டெலிகிராமை இன்ஸ்டால் செய்திருக்கும் மொத்த யூசர்களில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய இணையச் சந்தையான இந்தியா சுமார் 22% -த்தை பிரதிபலிக்கிறது என்றும் சென்சார் டவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பிற நாடுகளில் ஆப்பின் பதிவிறக்க(இன்ஸ்டால்) சதவிகிதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் இந்தோனேஷியாவில் முறையே 10% மற்றும் 8%யூசர்களுடன் டெலிகிராம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யும் மக்களின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் பலமடங்கு அதிகரித்தது. மேலும் 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 214.7 மில்லியன் இன்ஸ்டால்களை எட்டியது. இது கடந்த 2020ம் ஆண்டின் 133 மில்லியனில் இருந்து ஆண்டுக்கு 61% அதிகரித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

வாட்ஸ்அப் வெளியிட்ட தனியுரிமை கொள்கை விதிகள் டெலிகிராமின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
ஆனால் செயலியின் பதிவிறக்க எண்ணிக்கையும், அதனை பயன்படுத்தும் யூசர்களின் எண்ணிக்கையும் சமமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதம் 500 மில்லியன் யூசர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இந்த செயலி அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டதற்கான காரணம், வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கைகளை அதன் அதிக எண்ணிக்கையிலான யூசர் விவரங்களும் தொடர்புபடுத்தும் என்ற ஒரு செயல்பாட்டினால் தான். இருப்பினும் சமீபத்திய காலாண்டுகளில் டெலிகிராம் கூடுதல் ஆக்ட்டிவ் யூசர்களை பெற கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் $ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்த டெலிகிராம், 1 பில்லியன் முறை அல்லது அதற்கு மேல் பதிவிறக்கங்களுடன் உலகளவில் பதினைந்தாவது செயலியாக இடம் பிடித்துள்ளதாக சென்சார் டவர் டெக் க்ரஞ்சிடம் கூறியுள்ளது. பட்டியலில் உள்ள மற்ற செயலிகளில் WhatsApp, Messenger, Facebook, Instagram, Snapchat, Spotify மற்றும் Netflix ஆகியவை அடங்கும் என்று சென்சார் டவர் தெரிவித்துள்ளது. மொபைல் ஆராய்ச்சி நிறுவனங்கள் Android சாதனங்களில் முன்பே நிறுவப்பட்ட பெரும்பாலான கூகுள் செயலிகளின் பதிவிறக்கங்களை கண்காணிப்பதில்லை.

 
Published by:Arun
First published: